ஆந்திர மாநிலம் குண்டூரை பூர்வீகமாக கொண்ட சிர்ஷா  பாண்ட்லா என்பவர் பிரபல பில்லியனர் ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக் யூனிட்டி என்ற சிறப்பு விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்ல தயாராகி வருகிறார்.


ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக் யூனிட்டி என்ற சிறப்பு விண்கலம், விண்வெளிக்கு செல்ல தயாராகி வருகிறது. இதில் பயணித்து அரிய சாதனையை நிகழ்த்த ஆந்திர மாநிலம் குண்டூரை பூர்விகமாகக் கொண்ட இந்திய வம்சாவளி பெண் சிர்ஷா பாண்ட்லா தேர்வாகி உள்ளார். கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸுக்கு பிறகு அவர் இந்த பெருமையை பெறுகிறார். இந்த சாதனையை நிகழ்த்திய பிறகு விண்வெளியில் கால்பதித்த முதல் தெலுங்கு பெண் என்ற பெருமையும், இரண்டாவது இந்திய பெண் என்ற பெருமையையும் இவர் பெறுவார்.



அமெரிக்காவின் முன்னணி தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான விர்ஜின் கேலடிக், விண்கலத்தை வானில் செலுத்தும் குழுவில் அதன் நிறுவனத்தின் தலைவர் சர் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 5 பேர் தேர்வு பெற்றிருக்கின்றனர். இக்குழுவில் இந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ள இந்திய வம்சாவளி பெண்ணான சிர்ஷாவுக்கும் இடம் கிடைத்துள்ளது.  விர்ஜின் கேலடிக் விண்கலம் 600 பேருடன்  ஜூலை 11ஆம் தேதி வியாழன் அன்று நியூ மெக்சிக்கோவில் இருந்து ஏவப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


விர்ஜின் கேலடிக் நிறுவனம், அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அமைப்பிடம் கடந்த வாரம் விண்வெளி பயணத்திற்கான ஒப்புதல்களை பெற்றது. இந்த ராக்கெட்டில் விண்வெளிக்கு செல்ல சுமார் 600 பேர் ஏற்கெனவே தங்கள் பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் அமெசான் தலைவர் ஜெஃப் பெசோஸ் விண்வெளி சுற்றுப் பயணத்தில் போட்டியிட இந்த மாதத் தொடக்கத்தில் விர்ஜின் கேலட்டிக் நிறுவனத்திற்கு செல்ல உள்ளார்.


சிர்ஷா கடந்த 2015ஆம் ஆண்டில் விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் பொது விவகார மேலாளராகச் சேர்ந்தார். அப்போது அவர் வாஷிங்டனில் சுற்றுப்பாதையில் செயல்பட்டு பல உயர் பதவிகளுக்கு உயர்ந்தார். பர்டூ பல்கலைக்கழகத்தில் பட்டமும்,  ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் பட்டமும் பெற்றுள்ளார்.


முன்னதாக விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் ரிச்சர்ட் பிரான்சன் சுமார் 540 கோடி அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.