அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவுடனான நில எல்லையை அடுத்த இரண்டு வாரங்களுக்கு மூடுவதாக பங்களாதேஷ் அரசு அரசு அறிவித்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இருப்பினும் சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்கள் இயங்கத் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்தியாவுடனான விமானப் போக்குவரத்தை பங்களாதேஷ் நிறுத்திவைத்துள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பங்களாதேஷ் தினத்தில் இந்தியப் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.