நீளமான ராஜ நாகத்தை இணையதள பிரபலம் ஒருவர் அசால்ட்டாக பிடித்து அதன் தாக்குதலில் இருந்து நொடிப்பொழுதில் மிஸ் ஆகும் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.


வன விலங்கு ஆர்வலர், இன்ஸ்டாகிராம் பிரபலம்


வன விலங்குகளுடன் பழகி வீடியோக்கள் பகிர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளவர் அமெரிக்க இன்ஸ்டாகிராம் பிரபலம் மைக் ஹோல்ஸ்டன்.


முதலைகள், சிம்பன்ஸி, சிறுத்தைகள் தொடங்கி இவர் வீடியோ பதிவிடாத விலங்குகளே இல்லை. அடிப்படையில் விலங்கியல் நிபுணரான இவர் கொஞ்சமும் பயமில்லாமல் வன விலங்குகளுடன் பதிவிடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி தற்போது ஒரு இணையதள பிரபலமாக இவர் வளர்ந்துள்ளார்.


இந்நிலையில், பாம்புகளில் அதிக விஷத்தன்மை வாய்ந்த கிங் கோப்ரா எனப்படும் ராஜ நாகத்தின் வாலைப் பிடித்து வெகு அசால்ட்டாக ஹோல்ஸ்டன் கட்டுப்படுத்த முயலும் வீடியோ அவரது ஃபாலோயர்களை திக் திக் பொழுதுகளுக்கு தள்ளியுள்ளது.


 






ராஜ நாகத்திடம் இருந்து ’ஜஸ்ட் மிஸ்’


வாயைப் பிளந்து கொண்டு ஊர்ந்து வரும் ராஜ நாகத்தை அவர் தூக்க முயற்சிக்கும்போது பாம்பு அவரைத் தாக்க முற்படுகிறது. மிக மோசமாக அந்தப் பாம்பிடம் கொத்து வாங்கியிருக்க வேண்டிய ஹோல்ஸ்டன் மயிரிழையில் நல்வாய்ப்பாக தப்பிக்கிறார்.


இந்த வீடியோ நெட்டிசன்களை திகைப்புள்ளாக்கி தற்போது லைக்ஸ் அள்ளி வருகிறது. இன்ஸ்டாவில் 3 லட்சத்து 69 ஆயிரம் லைக்ஸை இந்த வீடியோ அள்ளியுள்ளது.







 
இதே போல் முன்னதாக ராஜ நாகத்துடன் அவர் பாத்ரூமில் ப்ரஷ் செய்யும் வீடியோவும் இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது.