சமூகத்தில் அதிக மதிப்புடன், பெரும் அந்தஸ்துடன் வாழ்வதற்காக முதல் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வரை என பல தரப்பட்ட மக்களும் தங்களது நேரத்தை பெரும்பாலும் தங்களது தொழிலிலும், வேலையிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதனால், பெரும்பாலானரோல் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடிவதில்லை. வெகு சிலரால் மட்டுமே குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட்டு, போதியளவு வருவாயுடன் இருக்க முடிகிறது.


ஒருவர் வாரத்திற்கே வெறும் 5 மணி நேரம் மட்டுமே வேலை செய்து மீதி நேரம் அனைத்தையும் தனது குடும்பத்திற்காகவே செலவிட்டு, மாதந்தோறும் ரூபாய் 1.20 கோடி சம்பாதிக்கிறார் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால், நம்பித்தான் தீர வேண்டும்.




அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிரகாம் கோச்ரனே. இவர் சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்டவர். இதனால், பட்டப்படிப்பை முடித்தவுடன் ஒரு தனியார் நிறுவனத்தில் சவுண்ட் எஞ்சினியராக பணிக்கு சேர்ந்தார். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் 2009ம் ஆண்டு வேலையை இழந்தார். இசை மீது மிகுந்த ஆர்வத்துடனே இருந்து வந்த அவருக்கு இசையைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. இதனால், என்ன செய்வதென்று தெரியாத கிரகாம் 2010ம் ஆண்டு இசை குறித்து பிளாக் ஒன்றை எழுதத்தொடங்கினார். அவரது பிளாக்கிற்கு வாசகர்கள் உள்பட மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.


இந்த நிலையில், அவருக்கு திருமணமானது. அவரது மனைவி புகைப்பட கலைஞர் ஆவார். அவரும் பிரிலான்சராக பணியாற்றி வருகிறார். இவரது இசை குறித்த ப்ளாக் மூலம் இவருக்கு வருவாய் கிட்டத்தொடங்கியது. மேலும், இசை குறித்த டிஜிட்டல் பதிவுகளையும் விற்பனை செய்தார். இது மட்டுமின்றி இசை தொடர்பாக தனியாக யூ டியூப் சேனல் தொடங்கியும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதுதவிர மியூசிக் கோர்ஸ்களையும் கற்றுத்தருகிறார்.




தன் ஆன்லைன் வீடியோ மற்றும் வெப்சைட் மூலமாக மாதந்தோறும் ரூபாய் 30 லட்சமும், தன் ஆன்லைன் மியூசிக் கோர்ஸ்கள் மூலம் மாதந்தோறும் ரூபாய் 76 லட்சமும், யூ டியூப் மூலம் மாதந்தோறும் ரூபாய் 15 லட்சமும் என மாதத்திற்கு ரூபாய் 1.20 கோடி சம்பாதித்து வருகிறார். தற்போது, இந்த பணிகளுக்காக வாரத்தில் 5 மணி நேரம் மட்டுமே செலவிடுகிறார். 2009ம் ஆண்டு வேலையிழந்த ஒருவர் 5 மணி நேரம் மட்டுமே வேலை பார்த்து தற்போது ரூபாய் 1.20 கோடி சம்பாதிப்பது பலருக்கும் உத்வேகம் ஏற்படுத்தியுள்ளது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண