அமெரிக்காவின்  பிரபல பல்கலைக்கழகமான ஹார்வர்டு, இது 389 ஆண்டுகள் பழமையான இந்த பல்கலைக்கழகம் உலக அளவில் பிரபலமானது அதிபர் டிரம்பிற்கு எதிரான செயல்களுக்காக தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. 

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் காசா போர் உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து பல்கலைக்கழகம் மாணவர்கள் போராட்டங்களை எடுத்து வந்ததை அடுத்து. டிரம்ப் இதை தடுக்க அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து இருந்தார்.ஆனால் பல்கலைக்கழகம் இதனை ஏற்க மறுத்தது இதனால் பல்கலைக்கழகத்துக்கு வர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் நிதியையும் மற்றும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் டிரம்ப் நிறுத்தினார். 

மேலும் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது,  அமெரிக்க பாதுக்காபு செயலாளர் கிறிஸ்டி நோயெம்  வெளியிட்ட அறிக்கையில் ஹார்வார்ட் பல்கலைக்கழக நிர்வாகம் வன்முறை, யூத எதிர்ப்பு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் சிலர் தொடர்பில் உள்ளனர் என்றும் இந்த காரணங்களுக்காக பொறுபேற்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகம் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென்றால் அரசுக்கு தேவையான தகவல்களை 72 மணி நேரத்திற்குள் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதனால் ஹார்வர்டில் படிக்கும் சுமார் 800 வெளிநாட்டு மாணவர்களின் கல்வி பயின்று வரும் நிலையில் டிரம்ப் அரசு நெருக்கடி தருவதாக பல்கலைக்கழகம் குற்றம் சாட்டி இருந்தது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை அடுத்து ஹார்வர்டுபல்கலைக்கழகம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் டிரம்ப் அரசின் உத்தரவை தற்காலிமாக நிறுத்தி உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.