அமெரிக்கா 30 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் இரட்டை குழந்தைகள்  பிறந்துள்ளது. இந்த தம்பதியருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


நாளுக்கு நாள் மருத்துவத் துறையில் நடந்து வரும் சாதனைகள் நம்மை ஆச்சரியத்தில் உறைய வைக்கிறது. அந்த அளவிற்கு மருத்துவத் துறையானது அறிவியல் வளர்ச்சியில் உச்சம் அடைந்து வருகிறது. அவ்வகையில் அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள தம்பதியனர் பிலிப்- ரேச்சல். இந்த தம்பதிக்கு கடந்த ஆக்டோபர் மாதம் 31ஆம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இரட்டைக் குழந்தைகள் என்பதை விடவும் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இந்த குழந்தைகள் 30 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1992ல் கிரையோபிரிசர்வ் எனும் மருத்துவ முறையில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை மூலம் பிறந்துள்ளது. இது மருத்துவத் துறையில் பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. 


இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண், இரண்டு ஆண் என மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் குழந்தை பெற்றுகொள்ள முடிவு செய்த இந்த தம்பதி, கரு முட்டையை தானமாகப் பெற முடிவு செய்தனர். அதற்காக அங்குள்ள தேசிய கருமுட்டை மையத்திடம் சென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 






தேசிய கருமுட்டை மையம், 1992ஆம் ஆண்டில் திரவ நைட்ரஜனில் பூஜ்ஜியத்துக்கும் கீழே மைனஸ் 200 டிகிரி வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்ட கரு முட்டை வழங்கப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்ட கரு முட்டையை பயன்படுத்தி செயற்கையான முறையில் கருவூட்டல் மூலம் இரட்டை குழந்தைகள் உருவாகி, தற்போது குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த கரூவூட்டல் மற்றும் குழந்தைகள் பிறந்தது, மருத்துவ உலகில் பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் 27 ஆண்டுகளாக இதேபோல் உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் 2020ல் மோலி - கிப்சன் தம்பதிக்கு குழந்தைகள் பிறந்தது. தற்போது பிறந்துள்ள இந்த குழந்தைகள் இதற்கு முந்தைய சாதனையாக பார்க்கப்படு குழந்தை பிறப்பை முறியடித்துள்ளன. 


இந்த இரட்டைக் குழந்தைகளில் உள்ள மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், ஒரு குழந்தை பெண், மற்றொரு குழந்தை ஆண். இந்த இரண்டு குழந்தைகளில், பெண் குழந்தைக்கு லிடியா என்றும், ஆண் குழந்தைக்கு திமோத்தி என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.