அமெரிக்க அதிபருக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், யார் வெற்றி பெறுவார் என நீர் யானை கணித்துள்ளது


தேர்தல் தொடங்கும் நேரம்:


அமெரிக்க அதிபருக்கான தேர்தலானது, நவம்பர் 5 ஆம் தேதியான இன்று நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையேயான நேர மாறுபாடு காரணமாக, தேர்தல் நேரத்தில் மாறுபாடு உள்ளது. இந்நிலையில், அமெரிக்க நேரப்படி நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 6 மணிக்கு  தொடங்கி நடைபெறக் கூடிய தேர்தலானது, மாலை 6 மணிக்கு தேர்தலானது நிறைவடைய உள்ளது. ஆனால் , சில மாகாணங்களில் நேர வேறுபாடு இருப்பதன் காரணமாக மாலை 8 மணி வரை தேர்தலானது நடைபெறும் என கூறப்படுகிறது. இந்திய நேரப்படி, இன்று மாலை 4.30 மணிக்கு தேர்தலானது தொடங்கிய வாக்குப்பதிவானது , சில மாகாணங்களில் நாளை காலை 4.30 மணிவரையிலும், சில மாகாணங்களில் 6.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது.


வாக்கு எண்ணிக்கை நேரம்:


தேர்தலானது நிறைவு பெற்ற உடனேயே, வாக்கு எண்ணிக்கையானது தொடங்கிவிடும், ஆகையால், இந்திய நேரப்படி நாளை மாலையே முடிவுகள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை , தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால், ஓரிரு நாட்கள் அதிகமாக ஆகலாம என எதிர்பார்க்கப்படுகிறது.  
ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் கமலா ஹாரீஸ் களம் காண்கிறார், குடியரசு கட்சி சார்பாக , முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் காண்கிறார். இருவருக்குமிடையிலான போட்டியானது , கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நீர் யானை கணிப்பு:


இந்த தருணத்தில், தேர்தல் தொடர்பாக முன்கூட்டியே சில கணிப்புகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக நீர் யானை, ஆமை, மீன்கள் உள்ளிட்டவைகளை வைத்து கணிப்புகளை நடைபெறுவது பிரபலமாகும். 
இந்நிலையில், நீர் யானைகளை வைத்து கணிப்புகள் நடைபெற்றது. அதில் பழங்களில் டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரீஸ் ஆகியோரின் பெயர்கள் எழுதப்பட்டு வைக்கப்பட்டது.


அதில் , நீர் யானையானது டொனால்டு டிரம்ப் பெயரில் வைக்கப்பட்ட பழங்களை தேர்வு செய்தது.





இந்நிலையில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவார் என்கிற நீர் யானையின் கணிப்பை குடியரசு கட்சியினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள், நாளை மாலைக்குள் தெரிந்து விடும் எதிர்பார்க்கப்படுகிறது.