மியான்மர் நாட்டில் தற்போது நடந்து வரும் ராணுவ ஆட்சியில் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் அங்கு நடப்பில் இருந்த ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து மின் ஆங் தலைமையிலான ராணுவ ஆட்சி மியான்மரை தவசப்படுத்தியது. மேலும் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடும் மக்கள் மீது இரக்கமற்ற முறையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது மியான்மர் ராணுவம். 




இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மியான்மர் ராணுவத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது குண்டு வீச்சு நடத்தப்பட்டது. மியான்மர் நாட்டின் யங்கொண்-னின் தெற்கு டகோன் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் மூன்று பேர் இறந்திருக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக சொந்தநாடு மக்கள் மீதே அந்நாட்டு ராணுவம் அடக்குமுறையை கையாண்டு வருகின்றது.  




இதன் ஒருபகுத்தியாக மியான்மர் ராணுவம் போராட்டம் நடத்தும் மக்கள் மெது வான்வழி தாக்குதல் நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் சிறுவர்கள் சிலரும் இறந்துள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது. மியான்மர் ராணுவத்திற்கு உலக நாடுகள் பல தங்களுடைய கண்டனத்தை முன்வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.