ஆசிஷ் வித்யார்த்தி ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் அதிகப் படங்களில் எதிர்மறை நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். பாபா, கில்லி,மாப்பிள்ளை, உத்தம புத்திரன் உட்பட பல தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் இவர். 1995 ஆம் ஆண்டு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வென்றுள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல்  பக்கத்தில் விதவிதமான உணவுகளை சுவைத்து அதுகுறித்து வீடியோ பதிவிடும் ஒரு ஃபுட் விளாகரும் கூட.


அண்மையில், ஆஷிஷ் வித்யார்த்தி ’ரசகுல்லா டீ’ என்ற புதுவிதமான தேனீரை சுவைத்துப் பார்த்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 


தேநீர் நேரம் என்பது நம் தினசரி பரபரப்பான வாழ்க்கையிலிரிந்து, குடும்பத்தினரோடும் நண்பர்களுடனும் ஒன்றுகூல கிடைக்கும் ஒரு பிரேக் டைம். தேநீரில் பலவகை உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தேனீரை ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி, கிராம்பு மற்றும் பலவற்றுடன் சேர்த்து வித்தியாசமான சுவைகளுடன் ருசிக்கிறார்கள். 


இவ்வரிசையில், சில மாதங்களுக்கு முன்பு, தெருவோர வியாபாரி ஒருவர் ’ரசகுல்லா சாய்’ தயாரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வினோதமான ரஸ்குல்லா சாய் கொல்கத்தாவைச் சேர்ந்தது. சமீபத்தில், நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இந்த தனித்துவமான சாயை முதன்முறையாக முயற்சித்தார். இன்ஸ்டாகிராமில் உணவுப் பதிவர் @kolkatadelites பதிவேற்றிய வீடியோவில், இந்த சாயின் தயாரிப்பைப் பார்க்கலாம். முதலில், டீ தூள்,பால், சர்க்கரை, இஞ்சி போன்ற பொருட்களைக் கொண்டு வழக்கமான சாயை தயார் செய்கிறார். அதன் பிறகு,  ஒரு ரசகுல்லாவை எடுத்து ஒரு குல்ஹாத்தில் (குல்ஃபி பரிமாறும் மண் கப்) வைக்கிறார். பின்னர் அதன் மேல் தயாரித்த தேனீரை ஊற்றி இறுதியாக சிறிது வெண்ணெய் கொண்டு அலங்கரிக்கிறார். 



இந்த வித்தியாசமான காம்பினேஷன் பிடித்துபோன நடிகர் வித்யார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கொல்கத்தாவில் ஒரு தெரு வியாபாரி இந்த பானத்தை செய்து கொண்டிருந்தார். கொதிக்கும் தேநீரில் இஞ்சி துண்டுகளை தட்டிப் போட்டார். பின்னர் அந்த தேநீரை ஒரு மண் குவளையில் ஊற்றினார். அந்தக் குவளையில் ஒரு பீஸ் ரசகுல்லா இருந்தது. டீயின் சூட்டில் ரசகுல்லா முழுவது ஊறிவிட்டது. இது முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. சும்கா சோமோக். ரொம்ப ருசியாக இருக்கிறது. தேநீர் முக்கிய பிரெட் போல் ரசகுல்லா ருசிக்கிறது. நீங்கள் எல்லோரும் ஒருமுறையாவது ரசகுல்லா தேநீரை ட்ரை பண்ணுங்க என எழுதியிருக்கிறார்.


இந்த வீடியோவைப் பார்த்து பலரும் பலவிதமாக ரியாக்ட் செய்துள்ளனர். ஒருசிலர் நிச்சயம் ஒருநாள் ட்ரை செய்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர் இதைப் பார்த்தாலே கோபம் வருகிறது என்று தெரிவித்துள்ளனர். தேநீர் பிரியர்கள் சண்டைக்கே வந்துள்ளனர். எது எப்படியோ நீங்களும் விருப்பம் இருந்தால் ட்ரை செய்து பாருங்கள்.