Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் ஐந்து முறை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 14 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்:


ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் இன்று மதியம் அரை மணி நேரத்தில் ஐந்து முறை நிலநடுக்கம் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  மேற்கு பகுதியில் இன்று உள்ளூர் நேரப்படி மதியம் 12.19 மணிக்கு 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, மதியம் 12.11 மணிக்கு 6.1 அளவுகோலில்  நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து, 12.45 மணிக்கு 6.2 ரிக்டர்  அளவுகோலில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  






இந்த நிலநடுக்கம் ஹெராட் நகருக்கு வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் நில அதிர்வு நடவடிக்கையின் மையம் அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து  5.5, 4.7, 6.3, 5.9 மற்றும் 4.6 ரிக்டர் அளவுகளில் ஐந்து நில அதிர்வுகள் ஏற்பட்டதாக  அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


14 பேர் உயிரிழப்பு:


இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக மேற்கு பகுதியில் உள்ள கட்டிடங்கள், வீடுகள் சேதம்  அடைந்தன. மேலும், வீட்டில் இருந்து மக்கள் வெளியே வந்து சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இது சம்பந்தமான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும், வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த 78 பேரை மீட்டு,  மருத்துவமனையில் சிகிகச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அரை மணி நேரத்தில் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுமார் 14 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


Gaganyaan: விண்வெளிக்கு செல்லும் இந்தியர்கள்: பத்திரமாக இறங்குவதற்கு அசத்தல் கருவி.. பக்கா பிளான் போட்ட இஸ்ரோ!