Singapore PM's: டிராகன் ஆண்டை ஒட்டி சிங்கப்பூர் தம்பதிகள், குழந்தை பெற முன்வர வேண்டும் என அந்நாட்டு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.


”குட்டி டிராகனை சேர்த்து கொள்ளுங்கள்” - சிங்கப்பூர் பிரதமர் 


சீன வம்சாவளியினர் டிராகன் ஆண்டில் பிறக்கும் குழந்தைகள் மங்களகரமானவை, என்ற நம்பிக்கைய கொண்டுள்ளனர். இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், நாளை தனது 72வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதைமுன்னிட்டு வெளியாகியுள்ள அவரது உரையில், “இளம் தம்பதிகள் தங்கள் குடும்பத்தில் ஒரு 'குட்டி டிராகனை' சேர்ப்பதற்கான சிறந்த நேரம் இது” என வலியுறுத்தியுள்ளார். 


”குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்”


அதோடு, ”குடும்ப வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சம் குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது. குழந்தைகளை இந்த உலகிற்கு கொண்டு வருவது பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் அவர்கள் கற்று வளர்வதைப் பார்த்து, ஒரு மைல்கல்லை ஒன்றன் பின் ஒன்றாக அடைந்து, ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வருவதைப் பார்க்கிறோம். என்னைப் போலவே தாத்தா பாட்டிகளும் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் பேரக்குழந்தைகளை நாங்கள் மதிக்கிறோம், வம்பு செய்கிறோம், அவர்களை வளர்க்க பெற்றோருக்கு உதவுகிறோம், மகிழ்ச்சி, நோக்கம் மற்றும் அன்பு நிறைந்த இந்த பயணத்தில் எங்கள் பங்களிப்பை வழங்குகிறோம். டிராகன்  என்பது சக்தி, வலிமை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னம். எனவே தம்பதிகள் இந்த ஆண்டில் தங்களது குடும்பத்தில் ஒரு குட்டி டிராகனை சேர்த்து கொள்ள வேண்டும்” என சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் வலியுறுதியுள்ளார். இவரும் டிராகன் ஆண்டான கடந்த 1952ம் ஆண்டு பிறந்தது குறிப்பிடத்தக்கது.






சரியும் பிறப்பு விகிதம்:


”குழந்தைகளைப் பெற வேண்டுமா, வேண்டாமா என்பதை தம்பதிகள் தான் முடிவு செய்ய வேண்டும். பெரும்பாலானோர் குழந்தை பெற முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன். வளர்ந்த சிங்கப்பூர் நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் காண முடிகிறது” எனவும் சிங்கப்பூர் பிரதமர் கவலை தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த 2022ம் ஆண்டு இதுவரை இல்லாத அளவில் பிறப்பு விகிதம் 1.05 ஆக சரிந்துள்ளது. முன்னதாக, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் முறையே, சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் 1.1 மற்றும் 1.12 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான், தம்பதிகள் குழந்தை பெற்றெடுக்க முன்வர வேண்டும், அவர்களுக்கு அரசு முழு ஆதரவு அளிக்கும் என சிங்கப்பூர் பிரதமர் பேசியுள்ளார்.


டிராகன் புத்தாண்டு கொண்டாட்டம்:


சீனாவில் புத்தாண்டு என்பது சந்திர நாட்காட்டியின்படி, 12 விலங்குகளை கொண்டு அடையாளபப்டுத்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் அடிப்படையில் புத்தாண்டு அந்நாட்டு மக்களுக்கு எப்படி அமையும் என்பதை கணிக்கின்றனர். அந்த வகையில் 2024ம் ஆண்டு சீனர்களுக்கு டிராகன் ஆண்டு ஆகும். அதன்படி, நடப்பாண்டு சீனர்களுக்கு செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டம் இருக்கும் என நம்புகின்றனர்.