உலகளவில் மிகவும் பிரபலமானவர்களில் அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியனும் ஒருவர். இவருடைய சமூக வலைதள பக்கங்களை பல லட்சம் பேருக்கு மேல் பின் தொடர்ந்து வருகின்றனர். இதனால் இவருடைய பதிவுகள் அனைத்தும் வைரலாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அந்தவகையில் தற்போது அவர் ஒரு திரைப்பட விழாவிற்கு செல்வதற்காக புதிய உடையை அணிந்துள்ளார். இந்த உடை தொடர்பான அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவு மிகவும் வைரலாக தொடங்கியுள்ளது. அப்படி அது வைரலாக காரணம் என்ன?
கிம் கர்தாஷியனின் இந்தப் பதிவில் அவர் ஒரு கருப்பு ஆடையை அணிந்துள்ளார். ஆனால் அதில் சிறப்பு என்னவென்றால் அந்த ஆடை தலை முதல் கால் வரை முழுவதுமாக மூடிய நிலையில் உள்ளது. இதனால் எதிரே இருப்பவருக்கு அது யார் என்று கூட கண்டறிய முடியாத வகையில் அந்த ஆடை அமைந்துள்ளது. இந்த ஆடையை அவர் பதிவிட்ட பிறகு தான் இது அவர் தான் என்பதை நம்மால் கண்டறிய முடிந்தது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விழாவிற்கு அவர் இந்த ஆடையை அணிந்து சென்றதாக கூறப்படுகிறது.
அவரின் இந்த ஆடை பதிவு ரசிகர்கள் பலரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகுந்த வியப்புடன் பார்த்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தப் பதிவிற்கு 5 லட்சத்திற்கும் மேல் லைக் கிடைத்துள்ளது. அத்துடன் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவு செய்துள்ளனர். 40 வயதான கிம் கர்தாஷியன் அமெரிக்க ரேப் பாடகர் மற்றும் தயாரிப்பாளர் வெஸ்ட் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த ஜோடி ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒன்று.
இதற்கு முன்பாக அவருடைய கணவர் வெஸ்ட் ஒரு திரைப்பட விழாவிற்கு இதேபோன்று முழு உடலை மூடுவது போல் ஒரு கருப்பு உடையை அணிந்து சென்று இருந்தார். அவருக்கு பிறகு அவரை போல் இவரும் ஒரு கருப்பு உடையை அணிந்து சென்றுள்ளார். கிம் கர்தாஷியன் இதற்கு முன்பாக அணிந்து சென்ற ஆடைகள் ஏலத்தில் பெருமளவில் பணத்தை பெற்றுள்ளது. குறிப்பாக இதற்கு முன்பாக அவர் அணிந்து இருந்த ஆடை ஒன்று ஏலத்தில் 2900 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. அதன்பின்னர் அவர் பயன்படுத்திய பர்ஸ் ஒன்று 5000 அமெரிக்க டாலர் என்ற தகவல் வெளியான உடன் அந்த பர்ஸுடன் அவர் இருக்கும் படம் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:‛என் கணவன் கட்டிலில் உனக்கு என்ன வேலை...’ இண்வர்வியூ அறையில் இருந்த தங்கையை துவம்சம் செய்த அக்கா!