ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசரகால நிதியம் (யுனிசெஃப்), The State of the World’s Children 2023 என்ற தலைப்பில் ஒவ்வொரு குழந்தைக்கும், தடுப்பூசி செலுத்தப்படுவதன் முக்கியத்துவத்தை பற்றி இந்தியா தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.


குழந்தைகள் தடுப்பூசி:


யுனிசெஃப் வெளியிட்ட தடுப்பூசி திட்டத்தின் புதிய தரவுகளின்படி, 55 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் உறிதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகிளில் மட்டுமே தடுப்பூசி திட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது என யுனிசெஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து கொரியா குடியரசு, பப்புவா நியூ கினியா, கானா, செனகல் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி போடும் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல்களால் இந்த தயக்கம் நீடிக்கிறது என கூறப்பட்டுள்ளது.


குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி:


உலகளவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த முடியாத சூழல் ஏறபட்டது. மேலும், கொரோனா பரவல், தடுப்பூசி செலுத்துவதில் பின்னடைவு, இவை இரண்டும் அடுத்த 30 ஆண்டுகளில் சர்வதேச அளவில் குழந்தைகள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய காரணமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஊரடங்கின் காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிலேயெ இருக்கும் சூழல் ஏற்பட்டது. அதேபோல் அத்தியாவசிய தடுப்பூசியிலிருந்து அனைவரும்  கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அதிக கவனம் செலுத்தினர். கொரோனா காலக்கட்டத்தில் மருத்துவர்களின் தேவைகள் அதிகரித்தது. இவை அனைத்தும் குழுந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்துவதில் பின்னடைவு ஏற்பட முக்கிய காரணிகளாக இருந்தது என தெரிவித்துள்ளனர்.  


தட்டம்மை நோயாளிகள்:


The state of the world’s children 2023 அறிக்கையின்படி, உலகிலேயே அதிக தடுப்பூசி கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்றும், இந்திய அரசாங்கத்தின் கொள்கை கோட்பாடுகளால் கொரோனா தொற்று இருந்தாலும் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்துவதில் எந்த சுனக்கமும் ஏற்படவில்லை என்றும் யுனிசெஃப் இந்தியாவின் பிரதிநிதி சிந்தியா மெக்காஃப்ரி கூறினார். 2019 மற்றும் 2021 க்கு இடையில் மொத்தம் 67 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என அறிக்கை கூறியுள்ளது. மேலும் 112 நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, 2022 இல், தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாக படிவாகியுள்ளது.


2022 ஆம் ஆண்டில் போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தை முந்தைய மூன்றாண்டு காலத்துடன் ஒப்பிடும் போது, ​​போலியோவால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளின் எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.