பிரான்சின் பிரதேசத்தில் உள்ள லாயல்ட் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பசிபிக் கடலில் நிலநடுக்கம்:


பிரான்சின் பிரதேசத்தில் உள்ள லாயல்ட் தீவுகளுக்கு தென்கிழக்கே நேற்று 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் தென்மேற்கு பிஜி, நியூசிலாந்தின் வடக்கு திசையிலும், ஆஸ்திரேலியாவின் கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது. மேலும் இது கடலில்  37 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள்து. உலகின் பெரும்பாலான பூகம்பங்கள் இப்பகுதியில்தான் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.






சுனாமி எச்சரிக்கையா?


இதனையடுத்து பசிபிக் பகுதியில் இருக்கும் பல மாநிலங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பிஜி, வானாட்டு, நியூ ஜெனியா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் லேசான சுனாமி உணரப்பட்டது.


கடலில் 1.5 அடி அளவில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் உருவானது. இதன் மூலம் மேலும் சுனாமி உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் இருக்கும் மக்களை உயரமான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.






இந்நிலையில் தான் நியூ கலிடோனியாவின் கிராண்டே டெர்வேவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள லாயல்டி தீவில் 2 வது நாளாக இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.  நேற்றைய தினத்தை விட இது சற்று குறைவாகும். இன்று இரண்டாவது முறையாக அதே பகுதியில் 6.5 ரிக்டர் அளவுகோளில் பதிவாகியுள்ளது.


தொடர்ந்து மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனால் அடுத்தடுத்தன் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது சேதங்கள் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.