பூமியின் மையப்பகுதி திடீரென சுழலுவதை நிறுத்தி அதன் சுழற்சியை எதிர்திசையில் சுழன்று வருகிறது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. Nature geoscience வெளியிட்ட ஆய்வின் முடிவில் பூமியின் மையம் எப்போதும் சுழலும் தன்மையிலிருந்து மாறி நிறுத்தப்பட்டுள்ளது என்றும் 2009ஆம் ஆண்டில் இது நின்று தற்போது எதிர் திசையில் சுழன்று வருகிறது என தெரிவித்துள்ளது.
பூமியின் மையம் ஒருமுறை சுழன்று தன் திசையை மாற்ற 7 தசாப்தங்கள் ஆகிறது, குறைந்தது 35 ஆண்டுகளுக்கு ஒருமுறை அது சுழலும் திசையை மாற்றும் என்றும் கடைசியாக 1970களில் அதன் திசையை மாற்றியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் அடுத்த திசை மாற்றம் 2040-களில் எதிர்பார்த்த நிலையில் தற்போது பூமியின் மையப்பகுதி தனது திசையை மாற்றி சுழல்கிறது என கூறியுள்ளனர்.
பூமி core, mantle, crust என மொத்தம் மூன்று அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
பூமியின் மையம் 1936 இல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது, விஞ்ஞானிகள் பூமி முழுவதும் பயணிக்கும் நிலநடுக்கத்திலிருந்து ஏற்படும் நில அதிர்வு அலைகளை ஆய்வு செய்யும் பணியில் பூமியின் மையம் பற்ற்இ அறியப்பட்டது. 7000 கிலோமீட்டர் அகலம் கொண்ட பூமியின் மையம், திட இரும்பால் சுற்றப்பட்டு உள் பகுதி திரவ இரும்பால் நிறைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், பூமியின் உள் மையத்தில் பயணிக்கும் நில அதிர்வு அலைகளின் பயண நேரம் கடந்த மூன்று தசாப்தங்களாக சிறிய ஆனால் முறையான மாறுபாட்டைக் உருவாக்கியுள்ளது. இந்த மாறுபாடு உள் மையத்தின் சுழற்சியால் சிறப்பாக விளக்கப்படுகிறது மற்றும் சுழற்சி வீதம் mantle and crustன் தினசரி சுழற்சியை விட வருடத்திற்கு 1 ° வேகத்தில் உள்ளது என தெரியவந்துள்ளது.
பீக்கிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு 1995 மற்றும் 2021 க்கு இடையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களை ஆய்வு செய்தது, இந்த ஆய்வில் 2009 ஆம் ஆண்டில் பூமியின் மையமானது சுழல்வதை நிறுத்தியதோடு சுழலும் திசையை மாற்றும் செயல்பாட்டில் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மையத்தின் சுழற்சி நாளின் நீளத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையது என்றும், பூமி அதன் வட்டார பாதையில் சுழலுவதற்கு எடுக்கும் சரியான நேரத்தில் சிறிய மாறுபாடுகளுக்கு வழிவகுக்கும் என்றும், பல்வேறு அடுக்குகளுக்கு இடையே இணைப்புகள் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.