ஜப்பானில் ரிக்டர் அளவுகோளில் 6.3 என்ற அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள இசு தீவில் 409.1 கிலோமீட்டர் ஆழத்தில், 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. இதனால் பல கட்டடங்கள் குலுங்கிய நிலையில், அதில் இருந்த பொதுமக்கள் உயிருக்கு அஞ்சி அலறியடித்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Japan Earthquake: ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. குலுங்கிய கட்டடங்கள்.. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு
குமரவேல் | 16 Jan 2023 11:43 AM (IST)
ஜப்பானில் ரிக்டர் அளவுகோளில் 6.3 என்ற அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் அதிர்வு வரைவு படம்