ஸ்பெயின் மற்றும் செக் குடியரசு நாடுகளில் ஒரு வீட்டில் 5 கஞ்சா செடிகள் வரை வளர்க்கலாம் என்ற சட்டம் அமலில் உள்ளது. அதேபோல், தாய்லாந்து நாட்டில் தனிநபர் ஒருவர் தன் சொந்த பயன்பாட்டிற்காக சிறிதளவாக கஞ்சா செடிகளை வளர்த்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தாய்லாந்து நாட்டில் உள்ள துரித உணவகங்களில் ஒன்றான "கிரேஸி ஹேப்பி பீட்சா" என்ற நிறுவனம் சமீபத்தில் புதிய முறையிலான உணவை அறிமுகப்படுத்தியது. அதன்படி, அவர்கள் தயாரிக்கும் பீட்சாவில் கஞ்சா இலைகளை சட்டப்பூர்வமாக பயன்படுத்த இருப்பதாக தெரிவித்து விளம்பரம் செய்துள்ளது.
இதன்மூலம், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பீட்சாவுடன் சேர்ந்து கஞ்சாவையும் சுவைக்கலாம் எனவும், நன்றாகவும் உறங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் மேலாளர் பானுசக் சூன்சாட்பூன் தெரிவிக்கையில்,
கடந்த சில மாதங்களாகவே எங்களது நிறுவனத்தின் விற்பனை நிலை மந்தமாக இருந்தது. அதனால் மக்களை கவரும் நோக்கில் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். தாய்லாந்தில் உள்ள 'கிரேஸி ஹேப்பி பீட்சா' நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் கஞ்சா பீட்சா கிடைக்கிறது.
மேலும் படிக்க : விவசாயிகளை விடுதலை போராளிகளாக அறிவிக்க கோரி நெல்மணிகளை சாலையில் கொட்டி போராட்டம்
இந்த வித்தியாசமான முயற்சியை மேற்கொள்ளும் முதல் நிறுவனம் நாங்களாக தான் இருக்கிறோம். அரசின் சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டே கஞ்சா பீட்சா விற்பனை செய்கிறோம். கிரேஸி ஹேப்பி பீட்சா நிறுவனத்தின் மூலம் தாய்லாந்தின் புகழ்பெற்ற டாம் யம் கை சூப்பின் சுவை இடம் பெற்றிருக்கும். இத்தகைய சூப் சுவையுடன் நன்றாக வறுத்த கஞ்சா இலையும் தூவப்பட்டு, பாலாடைக்கட்டியுடன் கலக்கப்படும்.
இந்த ஒரு கஞ்சா பீட்சாவின் விலை ரூ1123 என்றும், இரண்டு அல்லது மூன்று கஞ்சா இலைகளுக்கு மேல் சாப்பிட விரும்புபவர்களுக்கு கூடுதலாக ரூ. 225 வசூலிக்கபடும் என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
கும்பகோணத்தில் கனமழையால் சாலையில் விழுந்த 100 ஆண்டு பழமையான புளியமரம்
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்