அமெரிக்காவின் உட்டா மாகாணத்திலுள்ள லோகன் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் வித்தியாசமான ஒரு ஓட்டப்பந்தயம் அரங்கேறி உள்ளது. அந்த பள்ளியில் பெண்களுக்கான ஓட்டப்பந்தய போட்டிகள் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. குறிப்பாக பெண்களுக்காக தொடர் ஓட்டப்பந்தய போட்டியில் மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 


சிறப்பான முறையில் போட்டியாளர்கள் ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து திடீரென்று ஒரு நாய் அந்த பந்தயத்தில் பங்கேற்றது. ஆனால் வெற்றிபெறவேண்டும் என்ற ஆர்வத்தில் போட்டியாளர்கள் அந்த நாயை பொறுப்படுத்தாமல் ஓட தொடங்கினர். இந்நிலையில் மக்களின் அனைவரும் அந்த நாயையும் உற்சாகப்படுத்திய நிலையில் நாயும் போட்டியாளர்களுக்கு இணையாக ஓடத்தொடங்கியது. 


இறுதியில் அந்த நாய், முதல் போட்டியாளரை கடந்து சென்றதால் அந்த போட்டியில் அந்த நாய் தான் வெற்றி பெற்றது என்று நகைச்சுவையாக அறிவிக்கப்பட்டது. முடிஞ்சா என்ன ஜெயிச்சுப்பாரு என்று ஓடிய அந்த நாய்க்கு பாராட்டுகள் இணையத்தில் குவிந்து வருகின்றது. 







நிகழ்வு ஒன்று நடந்து கொண்டிருந்தது வீரர்கள் மன்னிக்கவும் வீராங்கனைகள் அந்த தொடர் ஓட்டத்தில் பங்கேற்று ஓடிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து நாய் ஒன்றும் அவர்களுக்கு போட்டியாக களத்தில் இறங்கியது இறுதி வரை யாரையும் முன்னுக்கு விடாமல் தலைதெறிக்க ஓடிய அந்த நாய் இறுதியில் மாணவிகளை பின்னுக்குத் தள்ளி ஓட்டப் பந்தய வீரர்களை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தது ஆகவே இந்த போட்டியில் அந்த நாய் வெற்றி பெற்றதாக நகைச்சுவையாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.