எல்லா நாடுகளிலும் ஒரு விதமான பிரச்சனைகள் இருக்கும். ஆனால் பிரான்ஸ் நாட்டில் வேறு விதமான பிரச்சனை ஒன்று தற்போது தலை தூக்கியுள்ளது. பார்க்க சிறியதாக இருந்தாலும் பிரான்ஸ் அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் அளவுக்கு அந்த பிரச்சனை வளர்ந்து உள்ளது. இதற்கெல்லம் காரணம் மூட்டைப்பூச்சி தான். ஆம் நீங்கள் படித்தது சரிதான். பிரான்ஸ் நாடு பாரிஸில் பார்க்கும் இடங்களில் எல்லாம் மூட்டைப்பூச்சியின்  தொல்லை தலைவிரித்து ஆடுகிறது. படுக்கையில் தொடங்கி பேருந்து ரயில் என அனைத்து இடங்களில் மூட்டைப்பூச்சி நிரம்பி வழிகிறது. இதனால் பிரான்ஸ் நாட்டிற்கு செல்லலாமா? வேண்டாமா என்ற அளவிற்கு  இந்த பிரச்சனை தற்போது உலக நாடுகள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.


பாரிஸில் கடந்த ஒரு வார காலமாக மூட்டைப்பூச்சி பிரச்சனை அதிகரித்து உள்ளது. தியேட்டர்களுக்கு சென்றால் மூட்டைபூச்சி கடி நிச்சயம் என்ற நிலையில் திரையரங்குகள் காத்து வாங்குகிறது. பேருந்து அல்லது ரயிலில் ஏரியவுடன் இருக்கையை பிடிக்கும் நிலை மாறி, இருக்கைகள் இருந்தாலும் மூட்டைப்பூச்சிக்கு பயந்து மக்கள் நின்றப்படடி பயணம் மேற்கொள்கின்றனர். பேருந்து, ரயில், வீடுகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் என எங்கே பார்த்தாலும் ‘மூட்டப்பூச்சி தொல்ல தாங்க முடியல சாமி’ என்ற அளவிற்கு பாரிஸ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த வாரம் நடைப்பெற்ற பேஷன் ஷோ தற்போது நடைபெறும் சர்வதேச ரக்பி போட்டி நடைபெறும் சூழலில் வழக்கத்தை விட அதிக அளவு சுற்றுலா பயணிகள் பிரான்ஸ் நாட்டிற்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த மூட்டைப்பூச்சி பிரச்சனை அந்நாட்டு அரசிற்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. பல சுற்றுலா பயணிகள் பிரான்ஸ் நாட்டில் தங்களுக்கு மூட்டைப்பூச்சியால் ஏற்பட்ட மோசமான நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.


அடுத்த ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடைபெற இருப்பதால் அதற்குள் மூட்டைப்பூச்சி பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டிய நிலையில் பிரான்ஸ் நாடு தள்ளப்பட்டுள்ளது. மூட்டைப்பூச்சியின் படையெடுப்பை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.


1950 களில் சர்வதேச பயணங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்பு அதிகரித்ததன் காரணமாக மூட்டைப்பூச்சிகள் பிரான்ஸ் நாட்டிற்கு படையெடுத்தது. அதன்பின்  தற்போது மீண்டும் பிரன்ஸ் நாட்டில் மூட்டைப்பூச்சிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மூட்டைப்பூச்சிகள் மிகவும் சிறியதாக இருந்தாலும் வெறும் கண்களால் பார்க்கமுடியும். இவை படுக்கைகள், சோபா போன்ற இடங்களில் இருக்கும். இவற்றால் பறக்க முடியாது என்றாலும் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு ஊர்ந்து செல்லும் தன்மை கொண்டது. மனிதர்களை கடிப்பதன் மூலம் ரத்தத்தை உறிஞ்சுகின்றன. இதனால் கடுமையான அழற்சி மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. பாரிஸின் துணை மேயர் இம்மானுவேல் கிரிகோயர், மூட்டைப்பூச்சி படையெடுப்பை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்களுக்கு மூட்டை பூச்சி குறித்து சந்தேகம் இருப்பில் இலவச தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறவும் பிரான்ஸ் அரசு வழிவகை செய்துள்ளது.


"பிளவை ஏற்படுத்த முயற்சி.. ஆனால், பிரதமர் மோடி விவேகமுள்ள தலைவர்" ரஷிய அதிபர் புதின் புகழாரம்