சீனாவை சேர்ந்த 9 வயது சீன சிறுவன் கியூப் போட்டியில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  

Continues below advertisement

Continues below advertisement

கின்னஸ் உலக சாதனையின் படி, ஸ்பீட் க்யூபிங் பிராடிஜி யிஹெங் வாங் (சீனா) 3x3x3 சுழலும் புதிர் கனசதுரத்தை (rubix cube) 4.69 வினாடிகளில் முடித்து பிதிய வேக சாதனையை படைத்துள்ளார்.  இதற்கு முன் கூட்டாக 4.86 வினாடிகளில் சாதனையைப் முடித்த கியூபிங் ஜாம்பவான்களான மேக்ஸ் பார்க் (அமெரிக்கா) மற்றும் டைமன் கொலாசின்ஸ்கி (போலந்து) ஆகியோரை யிஹெங் தனது புதிய சாதனை மூலம் வீழ்த்தியுள்ளார்.

மார்ச் 12 அன்று மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த யோங் ஜுன் கேஎல் ஸ்பீட்க்யூபிங் 2023 நிகழ்வின் அரையிறுதியில் யிஹெங் தனது சாதனை நேரத்தை பதிவு செய்தார். இப்போட்டியில், ஐந்து முறை முடிவுகளின் கணக்கில், யிஹெங் 4.35, 3.90, 4.41, 5.31 மற்றும் 6.16 வினாடிகளில் போட்டியைப் பதிவு செய்தார். கியூப் சங்கம் விதிகளின்படி இந்த 5 சுற்றில் கணக்கெடுக்கும் போது குறைந்த நேரம் மற்றும் அதிக நேரம் இரண்டும் கணக்கில் சேர்க்கப்படாது. மீதம் இருக்கும் மூன்று நேரத்தை மட்டும் கணக்கில் கொண்டு அதிலிருந்து நேரம் தீர்மானிக்கப்படும். அப்படி கணக்கிடும் போது யிஹெங் சுமார் 4.69 வினாடிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.