வடமேற்கு சிரியாவில் உள்ள இட்லிப் மாகாணத்தில் நேற்று இரவு 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சிரிய தேசிய பூகம்ப மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி,  இரவு 10.47 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  நிலநடுக்கம் இட்லிப் நகரத்திலிருந்து 61 கி.மீ. தொலைவிலும், 18.8 கிமீ ஆழமும் கொண்டது என கூறப்படுகிறது.


இந்த நிலநடுக்கம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போவின் வடக்கு மாகாணத்தில் உணரப்பட்டது.  மற்றொரு நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவில் வடமேற்கு கடலோர மாகாணமான லதாகியாவை இரவு 11:17 மணிக்கு தாக்கியது. 46 கிமீ ஆழத்தில், இரண்டாவது நிலநடுக்கத்தின் மையம், லதாகியாவிலிருந்து 50 கிமீ தொலைவில் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


கடலோர பகுதிகளில் இருந்த மக்கள் தங்கள் கட்டிடங்களில், சுவர்களில் இருந்து தூசி விழுவதைக் கண்டு பீதியில் தெருக்களில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தை அடுத்து சிரியாவின் பல பகுதிகளில் மக்கள் வீதிகளில் இருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 


பிப்ரவரி 6 அன்று தென்கிழக்கு துருக்கியை மையமாகக் கொண்ட 7.7 மற்றும் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் வடக்கு சிரியா கடுமையாக பாதிக்கப்பட்டது. சிரியாவைத் தாக்கிய நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,414 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,357 ஆகவும் உள்ளது என்று சிரிய சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று அறிவித்தது. அமைச்சகத்தின் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்ட பகுதிகள் அரசு கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரங்கள், நிலநடுக்கத்தில் சிரியாவின் அரசு மற்றும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சுமார் 7,000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41,000-ஐ கடந்து பதிவாகியுள்ளது. இரு நாடுகளிலும் உள்ள சுமார் 26 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவை. குளிர் காலநிலை, சுகாதாரம் மற்றும் தொற்று நோய்கள் பரவுதல் ஆகியவற்றுடன் அதிகரித்து வரும் சூழல் உள்ளது. சிரியாவில் கிட்டத்தட்ட 9 மில்லியன் மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை 400 மில்லியன் டாலர் நிதியை அளித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் தனது தேடுதல் மற்றும் மீட்புப் பணியை முடித்துக் கொண்டு, திரும்பப் பெற இருப்பதாக வருவதாக ரஷ்யா கூறியுள்ளது, துருக்கியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35, 3418 ஆக உள்ளது என்று துருக்கி பிரதமர் எர்டோகன் கடந்த செவ்வாயன்று தெரிவித்தார்.


இது குறித்து மீட்புப்படையினர் தெரிவிக்கையில், சிறுமியை மீட்கும் போது கண்களைத் திறந்து மூடிக்கொண்டார். தற்போது, அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். மீட்பு பணியில் ஒரு வாரமாக வேலை பார்த்து வருகிறோம். ஒவ்வொரு உயிரை காணும் போதெல்லாம் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அது ஒரு பூனையாக இருந்தாலும் மகிழ்ச்சி தான் என தெரிவித்தார்.