New Year  celebrations 2023: உகாண்டாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் உள்ள ஃப்ரீடம் சிட்டி மாலுக்கு வெளியே புத்தாண்டு கொண்டாட்டத்தி போது, பட்டாசு வெடித்த பிறகு,  கூட்ட நெரிசல் ஏற்பட்டது  ஞாயிற்றுக்கிழமை புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேரம் போகபோக கூட்ட நெரிசல் அதிகமானதால் ஷாப்பிங் மாலில், கூட்ட நெரிசலில்  ஒன்பது பேர் இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.


கம்பாலாவில் உள்ள ஃப்ரீடம் சிட்டி மாலுக்கு வெளியே பட்டாசு வெடித்த பிறகு, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் விளைவாக ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே மரணம் மற்றும் பலருக்கு காயம் ஏற்பட்டது" என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் லூக் ஓவோய்சிகியர் கூறியுள்ளார். அவசர உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த நபர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு ஒன்பது பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.


இதுவரை உயிரிழந்தவர்களில் பெரும்பாலனவர்கள் இளைஞர்கள் தான் அதிகம் உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உயிரிழப்புக்கு புத்தாண்டு கொண்டாட்டத்தில் அலட்சியமாக இருந்ததுதான் முக்கிய காரணம் என கூறுகின்றனர். கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களுடன் தொடர்புடைய கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு தான் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது. 


உலக மக்கள் அனைவரும் 2023 புத்தாண்டை முழு உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர்.  உலகம் முழுவதும் ஒரே தேதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேரமுறை என்பது ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். அந்த வகையில்  உலகின் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2023 புத்தாண்டு பிறந்தது.  இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் இரவு 12 மணி முடிந்து 2023 புத்தாண்டு பிறந்தது.   அதைதொடர்ந்து, ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், இந்தியாவிற்கு முன்னதாக அடுத்தடுத்து புத்தாண்டை வரவேற்றன


இந்தியாவில் பிறந்தது புத்தாண்டு:


அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் இந்தியாவிலும் 2023 புத்தாண்டு பிறந்தது. அதையடுத்து இந்திய மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். கேக் வெட்டி, இனிப்புகளை பகிர்ந்து. பட்டாசுகளை வெடித்து, வண்ண விளக்குகளை ஒளிரச் செய்து, பாடல்களை பாடியும், சக நண்பர்களை கட்டியணைத்தும் மகிழ்ச்சியை பகிர்ந்தனர். விடுதிகள், உணவகங்கள், கேளிக்கை கூடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அங்கு ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டம் களைகட்டியது.  புத்தாண்டையொட்டி நள்ளிரவிலேயே ஏராளமான பக்தர்கள் அருகிலிருந்த கோயில்களுக்குச் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.  கடந்த ஆண்டுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, 2023 புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும்  என்றும் சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதையொட்டி, HAPPY NEWYEAR 2023 என்ற ஹேஷ்டேக்கும் தேசிய அளவில் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்களும், பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.