மாணவர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இம்மாதிரியான சம்பவங்கள் உடல் ரீதியாக மட்டும் இன்றி, உளவியல் ரீதியாகவும் மாணவர்கள் மனதில் வடுவாக மாறிவிடுகின்றன. இச்சூழலில், அமெரிக்காவில் நடக்கும் கைது நடவடிக்கைகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.


இரண்டு நாள்களில் ஆறு ஆசிரியர்கள்:


கடந்த இரண்டே நாள்களில், ஆறு பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்த காரணத்தால் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாம் நிலை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக டான்வில்லியைச் சேர்ந்த 38 வயதான எலன் ஷெல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


16 வயது மாணவர்களுடன் மூன்று முறை பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஷெல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கரார்ட் கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் ஷெல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உட்லான் தொடக்கப் பள்ளியில் ஆசிரியரின் உதவியாளராக ஷெல் பணிபுரிந்துள்ளார். அதற்கு முன்பு லான்காஸ்டர் தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்திருக்கிறார்.


கைது தொடர்பாக பாய்ல் கவுண்டி பள்ளி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷெல் தற்போது நிர்வாக விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.


கடந்த சில நாள்களாகவே, மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக ஆறு பெண் ஆசிரியர்களை காவல்துறை கைது செய்த சம்பவம் அமெரிக்காவையே உலுக்கியுள்ளது.  


பெண் ஆசிரியர்கள் செய்த காரியம்:


ஆர்கன்சாஸ் கல்வியாளர் ஹீதர் ஹேர். இவருக்கு வயது 32. முதல் நிலை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பதின்பருவ மாணவருடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


ஓக்லஹோமாவைச் சேர்ந்த எமிலி ஹான்காக் (26) என்பவர், மாணவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக உள்ளூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். லிங்கன் கவுண்டியை சேர்ந்த இந்த ஆசிரியை 15 வயது மாணவனுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


எம்மா டெலானி ஹான்காக், வெல்ஸ்டன் பொதுப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர், பள்ளி கட்டிடத்திற்குள் பாலியல் சம்பவத்தில்  ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் ஸ்னாப்சாட்டிலும் தொடர்பு கொண்டுள்ளனர்.


அமெரிக்காவை உலுக்கி எடுத்த பாலியல் துன்புறுத்தல்கள்..!


அயோவாவின் டெஸ் மொயின்ஸில் உள்ள கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியரான 36 வயதான கிறிஸ்டன் கேன்ட், தனது பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் ஐந்து முறை டீன் ஏஜ் மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.


ஜேம்ஸ் மேடிசன் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியை அல்லி கெரட்மண்ட், 33, பல மாதங்களாக மாணவன் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.