அமெரிக்காவின் யூட்டாவில் திருமணத்திற்கு அடிமையான பெண் ஒருவர் 11 முறை திருமுணம் செய்து கொண்டுள்ளார். 12 வது கணவனை கரம்பிடிக்க ரெடியாகி வருகிறார். சமீபத்தில், தனியார் தொலைக்காட்சியில் ‘Addicted To Marriage’ என்ற நிகழ்ச்சியில் தோன்றிய மோனெட் டயஸ் இவ்வாறு கூறியுள்ளார். 52 வயதான பெண் 11 முறை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர் அதை இன்னும் டசனாக மாற்றுவார் என்று நம்புகிறார்.


அந்த நிகழ்ச்சியில்,  “அவர் தன்னை ' Boy crazy' என்று விவரிக்கிறார். மேலும் 2 வயதில் தனது முதல் ஈர்ப்பு ஏற்பட்டதிலிருந்து அவர் அப்படித்தான் இருப்பதாக கூறுகிறார்.  "நான் காதலில் வேகமாக விழுந்துவிடுகிறேன். எல்லாவற்றையும் கூட்டினால், நான் 28 முறை காதலை சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறேன். எனது திருமணம் எப்படி இருக்கும், என் கணவர் எப்படி இருப்பார் என்று நான் எப்போதும் கற்பனை செய்வேன். நான் நிச்சயமாக காதலை காதலிக்கிறேன்” என்றார். மேலும், உறவுகள் தனக்காக வேலை செய்யாதபோது, ​​​​தனது திரைப்படத்தில் பொருந்துவதற்கு "மற்றொரு நடிகரைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்று மோனெட் கூறுகிறார்.


அவளுக்கு பல கணவர்கள் இருந்ததால், அவள் திருமணம் செய்த அனைத்து ஆண்களையும் கண்காணிப்பதில் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிரமப்படுகிறார்கள்.


அவரின் அதிக திருமணத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது, அவருடைய  கிறிஸ்தவ நம்பிக்கை. திருமணத்திற்கு வெளியே உடலுறவு தவறானது என்று அவர் வளர்க்கப்பட்டிருக்கிறார். 


"நான் ஒரு பையனுடன் இரண்டு மாதங்கள் டேட்டிங் செய்வேன். உடலுறவு கொள்ள முடியாத போது திருமணம் செய்து கொள்வோம்” என்றும் மோனெட் கூறியுள்ளார்.


அவரது குறுகிய திருமணம் ஆறு வாரங்கள் மட்டுமே நீடித்தது. அதே நேரத்தில் அவரது நீண்ட காலம் 10 ஆண்டுகள். இருப்பினும், இவை அனைத்தையும் மீறி, அவர் காதலை கைவிடவில்லை. மேலும் 57 வயதான ஜான் என்ற இரண்டு முறை விவாகரத்து செய்யப்பட்ட ஒருவரைக் கண்டுபிடித்ததாகக் மோனெட்  கூறுகிறார். 


மோனெட்டின் தங்கையிடம் உங்கள் சகோதரியின் முன்னாள் கணவர்கள் அனைவரின் பெயரையும் உங்களால் குறிப்பிட முடியுமா? என்று எழுப்பிய கேள்விக்கு, அவர் தனக்கு தெரியாது என்று கூறி சில பெயர்களை தெரிவிக்கிறார்.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண