Car Accident:கார் தீ பற்றி எரிந்து விபத்து - தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் உட்பட 4 இந்தியர்கள் உயிரிழப்பு!

Car Accident: அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்து பற்றிய விவரங்களை காணலாம்.

Continues below advertisement

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதில் ஏற்பட்ட கார் விபத்தில் நான் இந்தியர்கள் உயிரிழந்தனர். 

Continues below advertisement

டெக்சாஸ் நகரில் கார் மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மூவர் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கபட்டுள்ளது. 

பெண்டன்வில்லேவில் வசித்து வந்த ஆர்யன் மற்றும் ஃபாரூக் இருவரும், டல்லாஸில் உள்ள ஆர்யனின் உறவினர்களைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல, லோகேஷ் தனது மனைவியைப் பார்க்க பெண்டன்வில்லுக்குச் சென்று கொண்டிருந்தார், தர்ஷினி தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 

இவர்கள் நான்கு பேரும் செயலி ஒன்றின் மூலம் ஒரே காரில் பயணித்துள்ளனர்.இவர்கள் சென்ற கார் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் அதன் அருகில் வாகனங்கள் பெரும் விபத்துக்குள்ளானது. வேகமாக வந்த லாரி மோதியதில் அடுத்தடுத்த கார்கள் மீது மோதியதில் தீ பற்றி எரிய தொடங்கியது. தீ வேகமாக பரவியதால் காருக்குள் இருந்த பயணிகள் வெளியே தப்பிக்க முடியவில்லை. உடல் கருகி உயிரிழந்தனர்.

நான்கு பேரும் செயலி மூலம் வாடகைக்கு ஒரே காரில் பயணம் செய்துள்ளது காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிரிஸ்கோ பகுதியில் தங்கியிருந்தபடி டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தர்ஷினி வாசுதேவன் உயர்கல்வி பயின்று வந்தது தெரிய வந்துள்ளது.

காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவு தீயில் கருகியதால் மரபணு சோதனை முடிவுகள் படி அவர்கள் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மூவர் தெலங்கானாவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Continues below advertisement
Sponsored Links by Taboola