4 Days Work Week in 200 Companies: வாரத்தில் 4 நாட்கள் மட்டும்தான் வேலை... அமல்படுத்திய 200 நிறுவனங்கள்.. எந்த நாட்டில் தெரியுமா.?

உலகளவில், ஐ.டி நிறுவனங்கள் தவிர, மற்ற நிறுவனங்களில், வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்யும் முறையே உள்ளது. ஆனால், ஒரு நாட்டில், 200 நிறுவனங்கள் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அமல்படுத்தியுள்ளன.

Continues below advertisement

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும், வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்யும் முறையே கடைபிடிக்கப்பட்டு வந்தது. பின்னர், ஐ.டி தொழில்நுட்ப வளர்ச்சிக்குப்பின், ஐ.டி தொடர்புடைய நிறுவனங்கள் அனைத்தும் 5 நாட்கள் வேலை செய்யும் முறையை பின்பற்றுகின்றன. ஆனால் தற்போது, 4 நாட்கள் வேலை செய்யும் முறையை 200 நிறுவனங்கள் அமல்படுத்தியுள்ளன. அது எந்த நாட்டில் என்று தெரிந்துகொள்ளலாம் வாருங்க.

Continues below advertisement

வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்து சோதனை

ஒரு வாரத்தில் 5 நாட்கள் வேலை செய்வது சோர்வை ஏற்படுத்துவதாகக் கூறி, வார வேலை நாட்களை 4 நாட்களாக குறைக்க, ஜப்பான், ஜெர்மனி, UAE உள்ளிட்ட பல நாடுகள் முயற்சித்து, அதற்கான சோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றன. இந்த சோதனைகள் நல்ல பலனை தருவதாகவும் பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே ஒருவர் வேலை செய்வதால், அவர்கள் குடும்பத்துடனும் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைப்பதாகவும், அதனால், ஊழியர்களின் மனம் மிகவும் புத்துணர்சியடைந்து, வேலை செய்யும் 4 நாட்களிலும் முழுமையான திறன் வெளிப்படுவதாகவும் பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வேலைக்கும், நிறுவனத்தின் வருமானத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் சோதனையின் மூலம் தெரியவந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வாரத்தில் 4 நாட்கள் வேலை - அமல்படுத்திய 200 இங்கிலாந்து நிறுவனங்கள்

வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் முறையை, இங்கிலாந்தில் ஏராளமான நிறுவனங்களில் சோதனை அடிப்படையில் மேற்கொண்டு வந்தன. இந்நிலையில், அதில் 200 நிறுவனங்கள் தற்போது வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் முறையை ஏற்றுக்கொண்டு, அதை அமல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடனும் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். 

வேலை நாட்கள் 4-ஆக குறைக்கப்பட்டபோதிலும், 5 நாட்களில் செய்ய வேண்டிய அளவிற்கான வேலைகள் முடிந்துவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமலேயே இந்த 4 நாட்கள் வேலை திட்டம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Continues below advertisement