Crime: அமெரிக்காவில் 20 வயதான இந்திய மாணவர் பல மாதங்களாக 3 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


படிப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு வசிக்கு வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் கணிசமாக இருக்கவே செய்கிறார்கள். அதிலும், குறிப்பாக படிப்பிற்காக அமெரிக்காவிற்கு செல்வோரின் எண்ணிக்கை சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படி, படிப்பிற்காக அமெரிக்கா சென்ற இந்திய மாணர் ஒருவர் மீது மோசமான சித்ரவதை அனுபவித்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 


இளைஞரை சித்ரவதை செய்த கொடூர கும்பல்:


அமெரிக்காவில் மிசோரி பல்கலைக்கழகத்தில் 20 வயது இந்திய மாணவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப  படித்து வருகிறார். இவர் கடந்து ஆண்டு தான் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறார்.  இவர் கடந்த ஏழு மாதங்களாக  3 பேர் கொண்ட கும்பலால் சிறைபிடிக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட இந்திய மாணவர் கொடுமை தாங்க முடியாமல் ஒரு நாள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  வந்தனர். அதாவது,  பாதிக்கப்பட்ட இளைஞர் செயின்ட் சார்லஸ் கவுண்டியில் உள்ள ஒரு வீட்டின் அடித்தளத்தில் சிறைப்பிடிக்கப்பட்டு இருந்தார். அங்கு வந்த போலீசார் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்திய மாணவரை சிறைப்பிடித்து சித்ரவதை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வெங்கடேஷ் ஆர் சத்தாரு, ஸ்ரவன் வர்மா பெனுமேட்சா மற்றும் நிகில் வர்மா பென்மட்சா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 


பல மாதங்களாக சித்ரவதை அனுபவித்த இளைஞர்:


இந்த சம்பவம் குறித்து போலீசார் விவரிக்கையில், "ஏழு மாதங்களாக இளைஞரின்  உறவினர் மற்றும் 2 பேரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.  மேலும், இவர்களது மூன்று வீடுகளில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.  இளைஞரை, வீட்டின் அடித்தளத்தில்  பூட்டிவிட்டு, பாத்ரூம் கூட பயன்படுத்த அந்த கும்பல் அனுமதிக்கவில்லை. பின்னர், மின்சார கம்பி, பைப், மரப் பலகைகள், குச்சிகள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றையால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.  மேலும், அதிகாலை 4.30 மணியில் இருந்து வேலை செய்யவும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.  வேலைகளை சரியாக முடிக்கவில்லை என்றால் கடுமையாக அடித்துள்ளனர்.


சில நாட்கள் நிர்வாணமாகவும் அடித்துள்ளனர். இப்படியே ஒரு ஆண்டாக சித்ரவதை அனுபவித்து வந்துள்ளார் இளைஞர். நாங்கள் இளைஞரை மீட்க சென்றபோது, அவரது உடலில் அதிகளவில் காயங்கள் இருந்தன. வண்டுக்கள் கடித்து, அவரது உடல் முழுவதும் சிராய்ப்பு மற்றும் வீக்கம் இருந்தது. மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தனர். மேலும், ”ஒரு மனிதன் இன்னொரு மனிதனை இப்படி நடத்துவது முற்றிலும் மனிதாபிமானமற்றது மற்றும் மனசாட்சியற்றது" என்று போலீசார் தெரிவித்தனர்.