வீட்டில் இருக்க வேண்டும் என்றால் மாதம் 100 டாலர்கள் கொடுக்க வேண்டும் என்று தன் 18 வயது மகளுடன் தாய் ஒப்பந்தம் செய்துகொண்டது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.


18 வயது மகளுடன் ஒப்பந்தம்:


அமெரிக்காவின் ஒக்லஹாமாவைச் சேர்ந்த தாய் ஒருவர் பின்னணியில் கீட்டோ ஆன்தமில் வரும் ஹார்ட் க்னாக் லைஃப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, தனது 18 வயது மகள் ஒப்பந்தப்பத்திரத்தில் கையெழுத்திடும் டிக்டொக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெற்றிக்காக கட்டமைத்துக் கொண்டிருக்கின்றேன் என்று குறிப்பிட்டு அதனைப் பகிர்ந்துள்ளார். 6 குழந்தைகளுக்குத் தாயான அவர் தனது 18 வயது மகள் ஜடா, இந்த ஒப்பந்தத்தின் படி மாதம் 100 டாலர்களை அவரது எதிர்காலத்திற்கு தயாராவதற்காக தரவேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவானது சுமார் 15 லட்சம் பார்வைகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது.




கடும் விமர்சனத்துக்குள்ளான வீடியோ:


ஆனால், அந்த தாயின் செயல் சரி செய்யவே முடியாத நீண்ட கால விரிசலுக்கு இந்த ஒப்பந்தம் வழி செய்துவிடும் என்று பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில் கமெண்ட் செய்துள்ள ஒருவர் “எனது தாய் எனக்கு இப்படி செய்திருந்தால் அது எனக்கு மயக்கத்தையே கொடுத்திருக்கும்.” என்று கூறியுள்ளார்.


மற்றொருவர் “என் தாய் இதை எனக்குச் செய்திருந்தால் அதன் பின்னர் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்திருக்கவே மாட்டோம்” என்று கூறியுள்ளார்.


தாயின் விளக்கம்:


இந்த வீடியோவிற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஜடாவின் தாய் விளக்கமளித்து மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 16 வயதில் நான் ஒற்றைத் தாயாக இருந்தேன். எனது பெற்றோர்கள் எனது வெற்றிக்காக எதையுமே செய்யவில்லை. எனக்கு தற்போது கிடைத்திருக்கும் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் அவ்வளவுப் போராடியிருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், தன் குழந்தைகள் தன்னை சார்ந்து வாழக்கூடாது என்பதற்காகவும், உண்மையான உலகத்தை எதிர்கொள்ள தனது மகளை தயார் படுத்துவதாகவும் கூறியுள்ளார். ஜடா கையெழுத்து போட்டது கார் கட்டணத்திற்காகவோ, இன்ஸ்யூரன்ஸ் கட்டணத்திற்காகவோ, செல்ஃபோன் பில்லுக்காகவோ அல்ல. அது அவர் தங்கியிருக்கும் ரூம், உணவு மற்றும் இதர விஷயங்களுக்காக தான் கொடுக்கவேண்டும் என்று கூறியிருப்பதாக ஜடாவின் தாய் கூறியுள்ளார்.




மகளின் விளக்கம்:


தனது தாயின் டிக்டொக் அக்கவுண்ட்டில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ள ஜடா, முதலில் இந்த ஒப்பந்தம் எனக்கு கொஞ்சம் கடினமாக தான் இருந்தது. ஆனால், பின்னர் இதை எப்படி சமாளிப்பது என்ர ஐடியா கிடைத்துவிட்டது என்று கூறியுள்ளார். மேலும், ஒரு கட்டத்தில் தனது வீட்டிற்கு தான் பணம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அதற்காக தான் தனது தாய் தற்போதை தன்னை தயார் செய்வதாகக் கூறியுள்ளதோடு, யாரும் இதனை மதிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.