ஸ்பெயினில் உள்ள ஒரு வயதான தாத்தா 112 ஆண்டுகள், 211 நாட்கள் வயதுடைய உலகின் மிக வயதான மனிதர் என கின்னஸ் உலக சாதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 செப்டம்பர் 2021 இல், ஸ்பெயினின் லியோனில் பிப்ரவரி 11, 1909 இல் பிறந்த சதுர்னினோ டே லா ஃப்யூன்ட்டே உலகில் வாழும் மிக வயதான நபர் (ஆண்) என்று சான்றிதழ் பெற்றார். அவருக்கு ஏழு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தனர், அதில் ஒரு குழந்தை இறந்துவிட்டார். சதுர்னினோ தற்போது தனது மகள் ஏஞ்சல்ஸ் மற்றும் மருமகன் பெர்னார்டோவுடன் வசித்து வருகிறார், மேலும் 14 பேரக்குழந்தைகள் மற்றும் 22 நான்காம் தலைமுறை பேரக்குழந்தைகள் உள்ளனர்.



உலகில் அதிககாலம் வாழ்ந்து வரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்து வரும் கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து, சிறப்பித்து வருகிறது. அதன் அடிப்படையில், பிரான்ஸைச் சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண் மிக அதிக காலம் வாழ்ந்த நபராக அறியப்படுகிறார். கடந்த 1997ம் ஆண்டு மரணமடைந்த ஜீயென்னி, 122 ஆண்டுகள் 164 நாட்கள் உயிர்வாழ்ந்தவர் ஆவார். அவரைத் தொடர்ந்து ஜிரோய்மோன் கிமுரா என்பவர் மிக அதிக காலம் வாழ்ந்தவராக அடையாளம் காணப்பட்டார். அவர் 116 ஆண்டுகள் 54 நாட்கள் உயிர் வாழ்ந்தவர். கடந்த 2013-ம் ஆண்டு கிமுரா காலமானார். இவரும் ஜப்பானைச் சேர்ந்தவர் தான். அவருக்கு பின் பல நாடுகளை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அதிக ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்த நபர்களாக கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்க்கோ நுனேஸ் ஒலிவேரா தனது 113 வயதில் 2018 ஜனவரி மாதம் 29ம் தேதி மரணமடைந்தார். ஒலிவேராவின் மரணத்தைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டை சேர்ந்த மசாஸோ நோனாக்கா, உலகில் வாழ்ந்து வருபவர்களில் அதிக வயதான ஆண்மகனாக இருந்தார், அவர் 2019ல் இறந்ததை அடுத்து, தற்போது ஸ்பெயினை சேர்ந்த  112 வயதாகும் சாதுர்னினோவை உலகின் அதிக வயதான ஆண் மகனாக கின்னஸ் நிறுவனமும் அங்கீகரித்துள்ளது.



சாதுர்னினோ 11 பிப்ரவரி 1909 அன்று பியூன்ட்டே காஸ்ட்ரோவில் பிறந்திருந்தாலும் அவர் வழக்கமாக பிப்ரவரி 8 அன்று தனது பிறந்த நாளை சற்று முன்னதாக கொண்டாட பல வருடங்கள் முன்பு முடிவு செய்திருக்கிறார். பலவருடங்கள் வாழும் வாழ்வின் ரகசியம் என்ன என்று கேட்டால், "சிறிய வாழ்க்கை, யாரையும் புண்படுத்தாதீர்கள்" என்று சிம்பிளாக கூறி முடிக்கிறார். 4.9 அங்குலம் மட்டுமே உயரம் உள்ளதால் 1936ல் நடந்த சிவில் வாரில் கலந்து கொள்ளவில்லையாம், அதற்காக தன் உயரத்திற்கு நன்றி சொல்கிறார் சதுர்னினோ. ஷூ செய்பவராக தன் மீதி வாழ்க்கையை ஒட்டியிருக்கிறார் இவர். ஆர்மியில் உள்ளவர்களுக்கு பூட்ஸ் செய்து கொடுத்து தன் வியாபாரத்தை பிற்காலத்தில் விரிவுபடுத்தி அப்போதே ஒரு அடையாளமாக திகழ்ந்துள்ளார். இவரை குறித்து கின்னஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இவர் செப்டெம்பர் 10 ஆம் தேதி 2021 ல் உலகின் வாழும் மிக அதிக வயதான ஆணாக இருக்கிறார், இவர் தற்போது 112 வருடம் 211 நாட்களாக இந்த பூமியில் வாழ்ந்து வருகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.