கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார். உடல்நலக்கோளாறு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வி.எஸ்.பாபு உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரும், அப்போதைய முதலமைச்சருமான ஸ்டாலினை தோற்கடித்து அரசியலில் கவனம் பெற்றவர் வி.எஸ்.பாபு. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி நுரையீரல் தொற்று, மூச்சுத்திணறல் காரணமாக சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
வி.எஸ்.பாபு காலமானார்
வி.எஸ்.பாபுவுக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்ததோடு, அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் இதனை மறுத்து மருத்துவனை நிர்வாகம் அவ்வப்போது வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வந்தது. கடைசியாக செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனை தரப்பிலிருந்து வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியானது. அதன் பிறகு மருத்துவமனை தரப்பில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. இந்நிலையில் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
யார் இந்த வி.எஸ்.பாபு?
சென்னை அரசியலில் நன்கு அறியப்பட்ட வி.எஸ்.பாபு தொடக்கத்தில் திமுகவில் உறுப்பினராக இருந்து வடச் சென்னை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். 2006-ஆம் ஆண்டு திமுக சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற இவர், 2011 சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வி.எஸ்.பாபு அதிமுகவில் இணைந்த நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவளித்து பின் மீண்டும் அதிமுகவில் செயல்பட்டுவந்த நிலையில் கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலினை தோற்கடித்து பிரபலமானதோடு அவரது கை சைகையும் பிரபலமானது.
ALSO READ | VS Babu: ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
