தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தனுஷ். இவரது செயல்பாடுகள் அனைத்தும் சமீபகாலமாகவே அரசியலை குறிவைத்தே இயங்கி வருகிறது.

Continues below advertisement

ஓம்:

இந்த நிலையில், அவரது ஓம் திரைப்படம் நாளை வெளியாகிறது. அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

கொண்டாடும் ரசிகர்கள்:

பொதுவாக தனுஷ் படம் வெளியாகிறது என்றாலே அவரது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடுவது வழக்கம். அவர் அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் சூழலில், இந்த படத்தை வழக்கமாக கொண்டாடுவதைக் காட்டிலும் மிகவும் சிறப்பாக கொண்டாட தனுஷ் ரசிகர்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

நெல்லையில் உள்ள ஒரு திரையரங்கில் தனுஷின் அரசியல் வருகைக்கு ஏற்ப ஒரு கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சுவர்களில் நாளைய முதல்வர் தனுஷ் என்று குறிப்பிட்டு தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

அரசியல் வசனங்கள் உள்ளதா?

மேலும், படம் நாளை வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகளில் தனுஷ் ரசிகர்கள் தங்களது மக்கள் நற்பணி மன்ற கொடிகளை ஆங்காங்கே கட்டி வருகின்றனர். மேலும், படத்தில் அரசியல் வசனங்கள் ஏதும் இடம்பெற்றுள்ளதா? என்றும் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

அடுத்த சட்டசபைத் தேர்தலை குறிவைத்து இயங்கி வரும் தனுஷ் இந்த படத்திற்கு பிறகு தனது அரசியல் பணிகளை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளார். அடுத்தாண்டு உள்ளாட்சித் தேர்தலில் தனுஷ் ரசிகர்கள் போட்டியிடுவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தனுஷ் அறிவுரை:

ஓம் படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாடுவதற்காக தனுஷ் ரசிகர்கள் தொகுதி வாரியாக ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தனது ரசிகர்களுக்கு தனுஷ் ஓம் படத்தின் கொண்டாட்டம் பொதுமக்கள் யாரையும் பாதிக்காத வகையில் கொண்டாட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தனுஷ் மட்டுமின்றி இந்த படத்தில் மம்மூட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதி்ன் ஷா, இந்திரன்ஸ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். கலைவாணன் படத்தொகுப்பு செய்ய, எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.