விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் வருவாய் துறையினருக்கு பணியாற்றுவதில் ஏற்பட்ட பணிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு வருவாய் துறை கூட்டமைப்பினர் (பெடரா) நன்றி தெரிவித்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தினை முதல்வர் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறியுள்ளனர்.
உங்களுடன் ஸ்டாலின் - நன்றி தெரிவித்த வருவாய்த்துறை
தமிழக அரசு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்ற திட்டத்தின் மூலம் பத்தாயிரம் முகாம்களை தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பணி செய்யக்கூடிய வருவாய் துறை பணியாளர்கள் குடிமக்களுக்கு அரசு துறைகளின் சேவைகளை, அவர்களது வீட்டு வாசலில் கிடைக்கச் செய்வதில் பல்வேறு இடையூறுகள் இருப்பதாக வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலர், அத்துறை முதன்மை செயலருக்கு கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஒவ்வொரு முகாமுக்கும் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உபசரிப்புகளை வழங்க, 25,000 ஆயிரம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யவும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், வருவாய் துறை மற்றும் பதிவிற்கான கவுண்டர்கள் அதிகரிக்க கூடுதலாக கணினிகள் மற்றும் அச்சுப்பொறிகள் போன்ற உபகரணங்கள் பயன்படுத்தவும்,
பழைய ஓய்வூதிய திட்டத்தினை முதல்வர் செயல்படுத்துவார்
பெறப்படும் மனுக்களை 45 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்கு பதிலாக 60 நாட்களில் தீர்வு காணவும், தாசில்தாரின் கீழ் நடைபெறும் ஒவ்வொரு முகாமுக்கும் 5,000 வரை மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து செயவிட முதல்வர் உத்தவிட்டுள்ளதற்கு தமிழக முதலமைச்சருக்கு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (பெடரா) மாநில ஒருங்கினைப்பாளர் சுந்தர்ராஜன் நன்றியை தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த குழு அமைக்கப்பட்டு அந்த குழு முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளதால் பழைய ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறியுள்ளனர்.