விழுப்புரத்தில் பதிவு செய்யாத தனியார் விடுதிகள், இல்லங்கள் மூடப்படுமா...?

ஆட்சியர் அலுவலகத்தில் அரசு மற்றும் தனியார் விடுதிகள், இல்லங்கள் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு மற்றும் தனியார் விடுதிகள், இல்லங்கள் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

Continues below advertisement

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் கூறியதாவது:-

பாதுகாப்பான சூழ்நிலையில் எவ்வித இடையூறும் இல்லாமல் பெண்கள் தங்கி பணிபுரிய வேண்டும் என்பதற்காக மகளிர் தங்கும் விடுதிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் விடுதிகளுக்கு அரசின் சார்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் பிற ஊர்களிலிருந்து வரும் மாணவ- மாணவிகள் தங்கி பயில்வதற்காக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பள்ளி- கல்லூரி விடுதிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 118 அரசு மற்றும் தனியார் விடுதிகளும், 15 இல்லங்களும் செயல்பட்டு வருகின்றன.

தனியார் விடுதி மற்றும் இல்லங்களை பதிவு செய்வதற்கு தாசில்தாரிடமிருந்து பெறப்பட்ட விடுதி கட்டிடத்திற்கான உரிமைச்சான்று, சம்பந்தப்பட்ட அலுவலரிடமிருந்து பெறப்பட்ட கட்டிட உறுதித்தன்மை சான்று, சுகாதார ஆய்வாளரிடமிருந்து பெறப்பட்ட சுகாதார சான்று, தீயணைப்புத் துறையிடமிருந்து பெறப்பட்ட தீ பாதுகாப்பு சான்று, காவல் துறையிடமிருந்து பெறப்பட்ட காவல் சரிபார்ப்பு சான்று, நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் ஆடிட்டரிடமிருந்து பெறப்பட்ட தணிக்கை அறிக்கை, குழந்தைகள் மையத்திலிருந்து பெறப்பட்ட சான்று, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட விவரம், பெயர் பலகை, சுகாதாரமான முறையில் அமைக்கப்பட்ட சமையற்கூடம், சமையல் பாத்திரங்கள் குறித்த விவரங்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பத்துடன் விடுதி கட்டிடம், தங்குமிட வசதி, விடுதி கட்டிட வரைபடம், விடுதி பணியாளர்கள் விவரம், விடுதியில் வழங்கப்பட்டு வரும் உணவு விவரம், விடுதியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஆண்டறிக்கை, விடுதி வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஓராண்டிற்கான வங்கி அறிக்கை போன்ற விவரங்களுடன் விண்ணப்பித்து பதிவு செய்துகொள்ள வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவினை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அரசு விதித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்து புதியதாக விடுதி பதிவு செய்பவர்கள் அல்லது புதுப்பிக்க வேண்டியவர்கள் வருகிற அக்டோபர் 18-ந் தேதிக்குள் பதிவு செய்திட வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட விடுதிகள், இல்லங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார். ஆனால் இது போன்ற கூட்டங்கள் நடைபெறும்போது நடவடிக்கை எடுப்பதாக சொல்கிறார், ஆனால் தற்போது வரை உரிமம் இல்லாத விடுதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.


“பொறுப்பு; ஆட்சி; பென்ஷன் பணம் - பறிபோனால் நாங்கள் பொறுப்பல்ல” - வெளிப்படையாக மிரட்டும் அண்ணாமலை

பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயதும் இனி 60.. அமலுக்கு கொண்டுவந்த தமிழ்நாடு அரசு..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

Continues below advertisement
Sponsored Links by Taboola