விழுப்புரம் அருகே 17 வயதில் கட்டாய திருமனம் செய்து கொண்ட இளம்பெண் 18 வயதடைந்தவுடன் தனது 5 வருட காதலனை கரம்பிடித்து பாதுகாப்பு வழங்க கோரி அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜான்சிராணி மற்றும் பழைய கருவாட்சி கிராமத்தை சேர்ந்த  ஞானமுத்து என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததுள்ளனர்.  இவர்களது காதல் விவகாரம் ஜான்சி ராணியின் பெற்றோருக்கு தெரியவரவே 18 வயது பூர்த்தியடையாத ஜான்சிராணியை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த கிளின்டன் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் 18 வயது பூர்த்தியடைந்த ஜான்சிராணி கடந்த 18 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனான ஞானமுத்து வீட்டிற்கு சென்று காதலனுடன் வாழ்ந்து வந்துள்ளார். 


மனைவி காணவில்லை என கிளின்டன் பெரியதச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் நேற்றைய தினம் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் காதலனை கரம்பிடித்த ஜான்சிராணி ஞானமுத்து தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்ககோரி அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். காதல் திருமணம் செய்த  தம்பதியிடம் போலீசார் விசாரனை செய்ததில் ஜான்சிராணி தனக்கு 17 வயதில் விருப்பமில்லாமல் கட்டாய திருமணம் பெற்றோர்கள் செய்து வைத்ததால் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் தனது காதலன் ஞானமுத்துவை கரம்பிடித்தாக தெரிவித்து தான ஞானமுத்துவுடன் செல்வதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் பேரில் போலீசார் ஜான்சிராணியை ஞானமுத்து குடும்பத்துடன் அனுப்பி வைத்தார். மேலும் 17 வயது இளம்பெண்ணிற்கு கட்டாய திருமணம் செய்த பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.




“பொறுப்பு; ஆட்சி; பென்ஷன் பணம் - பறிபோனால் நாங்கள் பொறுப்பல்ல” - வெளிப்படையாக மிரட்டும் அண்ணாமலை


பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயதும் இனி 60.. அமலுக்கு கொண்டுவந்த தமிழ்நாடு அரசு..!