கைவினைஞர் முன்னேற்ற கட்சி ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரத்தில் கைவினைஞர் முன்னேற்ற கட்சி சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறந்த சமூக சேவைக்காக விழுப்புரம் முன்னாள் திமுக நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் அவர்களுக்கு செங்கோல் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கைவினைகள் முன்னேற்ற கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் உமாபதி:
சிதம்பரத்தில் சிறப்பு தொழில்பேட்டை அமைக்க வேண்டும்
விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் அறங்காவலர் குழுவில் விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும். கவரிங் நகை தயாரிப்பில் முக்கிய கேந்திரமாக விளங்கும் சிதம்பரத்தில் சிறப்பு தொழில்பேட்டை அமைக்க வேண்டும். தமிழக அரசின் கூட்டுறவு வங்கிகளில் பாரம்பரிய பொற்கொல்லர்களை நகை மதிப்பீட்டாளராக நியமிக்க வேண்டும் என்றும் மேலும் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்த நிலையில்,
திமுக கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் இது மிகவும் வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து வரக்கூடிய 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதா அல்லது எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் திமுக அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.