Viluppuram Traffic change : விழுப்புரத்தில் போக்குவரத்து மாற்றம்... வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... முழு விவரம் உள்ளே !

ரயில் நிலையத்தின் பழைய முன்பதிவு அலுவலகம் அருகில் பயணிகள் நடந்து செல்லும் வகையிலிருந்த நடைபாதை பாலத்தை அகற்றும் பணிகள் ஆகஸ்ட் 31, செப்டம்பா் 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

Continues below advertisement

விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, வருகின்ற 31 மற்றும் செப்டம்பா் 2 ஆகிய தேதிகளில் விழுப்புரம் - திருச்சி சாலை ரயில்வே மேம்பாலப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

விழுப்புரம் - திருச்சி சாலை ரயில்வே மேம்பாலப் போக்குவரத்தில் சிறிது நேரம் மாற்றம்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, வருகிற 31 மற்றும் செப்டம்பா் 2 ஆகிய தேதிகளில் விழுப்புரம் - திருச்சி சாலை ரயில்வே மேம்பாலப் போக்குவரத்தில் சிறிது நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ரயில் நிலையத்தின் பழைய முன்பதிவு அலுவலகம் அருகில் பயணிகள் நடந்து செல்லும் வகையிலிருந்த நடைபாதை பாலத்தை அகற்றும் பணிகள் ஆகஸ்ட் 31, செப்டம்பா் 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

விழுப்புரம் - புதுச்சேரி சாலையிலுள்ள ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்படாது

இந்தப் பாலத்தின் மேற்குப் பகுதியில் உயரழுத்த மின் விநியோகப் பாதையும் அமைந்துள்ளது. இந்த பகுதியிலும் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் 31, செப்டம்பா் 2-ஆம் தேதிகளில் முற்பகல் 11.15 மணி முதல் 12.15 மணி வரையிலும், மாலை 4.15 மணி முதல் 5.15 மணி வரையிலும் விழுப்புரம் - புதுச்சேரி சாலையிலுள்ள ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்படாது. மற்ற நேரங்களில் போக்குவரத்து வழக்கம்போல் இயங்க அனுமதிக்கப்படும்.

மாற்று வழி

போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரங்களிலும் ரயில் நிலைய மேற்குவாயில் பகுதியிலுள்ள சுரங்கப் பாதை வழியாக இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola