மழை வெள்ளம் புகுந்து 4,800 கோழிகள் உயிரிழப்பு


விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் விழுப்புரத்தில் அதிகப்படியாக 22 செ.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, கண்டாச்சிபுரம் ஆகிய பகுதிகளில் 10 செ.மீக்கும் அதிகமான மழை பொழிவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து கெடார் பகுதியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் கெடார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் முக்கியமாக விவசாய நிலங்கள், சாலைகள் மற்றும் கால்வாய்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் கெடார் பகுதியில் பெய்த மழையால் விவசாய நிலங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு கெடார் - செல்லங்குப்பம் சாலையில் கெடார் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி பழனியம்மாள் (39) என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் கோழி பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த சுமார் 4,800 கோழிகள் உயிரிழந்ததுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கோழிகளை கால்நடை மருத்துவரை வரவழைத்து பரிசோதனை செய்தனர்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு: 


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான , மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


11.08.2024 முதல் 15.08.2024 வரை: மன்னார்  வளைகுடா,  தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்தது: 


தமிழ்நாட்டில் வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆகையால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் கிழக்கு ராஜஸ்தான், பீகார், அசாம், மேகாலயா, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹே ஆகிய மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும் ஆகையால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 


இதனை தொடர்ந்து, வடமேற்கு இந்திய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் 12 முதல் 17 ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


அதேபோல், சண்டிகர் மற்றும் அரியானாவில் ஆகஸ்ட் 12 முதல் 15-ம் தேதி வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று கிழக்கு ராஜஸ்தான் மீது அதிக தீவிரத்துடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.