விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள்  உயிரிழந்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவரையை போலீசார் தேடி வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷனை பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர். இவரது மகன் புவனேஷ் வயது 23. இவரது நண்பர் பூந்தோட்ட பகுதியைச் சேர்ந்தவர் மகபுல் மகன் சையத் முபாரக் ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் எறையனூரில் உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது திண்டிவனம் மின்சார அலுவலகம் அருகே வரும்போது நல்லாளம் பகுதியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த டிப்பர் லாரியானது இவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புவனேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுங்காயங்களுடன் அவரது நண்பர் முபாரக் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


இந்த நிலையில், முபாரக் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய டிரைவரை வலை வீசி போலீசார் தேடி வருகின்றனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




 










ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண






ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.