விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கொரலூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட இருளர் குடிமக்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் ஊருக்கு ஒதுக்கப்புறமாக வசித்து வருகிறார்கள். இவர்கள் வசிக்கின்ற பகுதிக்கு சரியான சாலை வசதி இல்லாததால் நேற்று குப்பன் என்பவர் இறந்துவிட்டார். இறந்த குப்பனின் உடலை எடுத்து செல்ல அமரர் ஊர்தி அவர்கள், வசிக்கும் பகுதிக்கு அழைக்கும் பொழுது உங்கள் பகுதியில் சாலை இல்லாததால் வண்டி உள்ளே வராது, நீங்கள் இறந்தவரின் உடலை ஊருக்கு வெளிப்புறம் கொண்டு வாருங்கள் என்று அமரர் ஊர்தி ஓட்டுநர் கூறியுள்ளார்.
சாலை வசதி இல்லாததால் கொரலூர் இருளர் மக்கள் இறந்து போன குப்பனின் உடலை சாலை வசதி இல்லாத குண்டும் குழியுமான வழியாக தோளில் சுமந்து சென்றனர். பலமுறை எங்கள் பகுதிக்கு சாலை வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் உட்பட்ட பல்வேறு அரசு அதிகாரிகளிடம் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் இருளர் மக்கள் வசிக்கும் பகுதிக்கு இதுவரை சாலை வசதி செய்து தரவில்லை. உடனடியாக எங்கள் பகுதிக்கு சாலை வசதி வேண்டுமென இருளர் மூதாட்டி ஒருவர் குண்டும் குழியுமான சேற்று சாலையில் இறங்கி இருளர் மூதாட்டி கம்சலா என்பவர் ஒப்பாரி பாடல் பாடினர். எங்கள் பகுதிக்கு விரைந்து சாலை வசதி அமைக்க வேண்டுமென கோரலூர் இருளர் மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்