விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே இடப்பிரச்சனையில் ஐஏஎஸ் அகடாமி கட்டிடம் இடிக்கப்பட்டத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகிலுள்ள பாலப்பட்டு பகுதியில் விஜய சாமுண்டீஸ்வரி என்பவர் மனித நேய மெளலிஸ் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். அதன் அருகிலேயே சாய் பாபா கோயில் கட்டியுள்ளார். இந்த பயிற்சி மையத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைந்துள்ள இடத்திற்கும், அருகில் பெருமாள் என்பவருக்கும் நிலம் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே விஜயசாமீண்டிஸ்வரிக்கும், பெருமாலுக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக பிரச்சனை நடந்து வந்த நிலையில்,
இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள இந்நிலையில் நேற்று இரவு பெருமாள் ஜெசிபி இயந்திரம் மூலம் ஐஏஎஸ் பயிற்சி கட்டிடம், சாய்பாபா கோயில் ஆகியவற்றை இடித்துள்ளார். காலையில் மாணவர்கள் வந்து பார்த்தபோது கட்டிடம் இடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் மாணவர்கள் ஐம்பதுக்கும் மேற்படோர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
அண்ணாமலை பாதயாத்திரை.. அது பாதயாத்திரையா, வசூல் யாத்திரையா? கொந்தளித்த சிவி சண்முகம்