விழுப்புரம்: மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி என்றும் தலித் மக்களுக்கு மட்டும் சொந்தமானவர் திருமாவளவன் அல்ல சமத்துவத்தை விரும்பு அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள தலைவராக திருமாவளவன் உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் நகராட்சி திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், அமைச்சர் பொன்முடி, கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ், மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது எம் பி ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி.,
திருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமானவர் அல்ல, அனைத்து சமூகத்திற்கும் சொந்தமானவர், மாணவ பருவத்திலிருந்தே அம்பேத்கர் கொள்கையை பரப்பியவர். அம்பேத்கர், பெரியார், அண்ணா கொள்கையை உள்வாங்கி செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். விசிக தலித் மக்களுக்கான கட்சி அல்ல, தமிழ் பேசும் அனைவருக்குமான கட்சி தோல்விகளை பெற்றாலும் அதனை கடந்து வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேசினால் பாஜகவினர் அலறுகிறார்கள். கொள்கையோடு பேசுவதால் தான் பாஜக பயப்படுகிறது. தேர்தல் ஆணையம் அங்கிராம் என்ன கொடுப்பது, மக்கள் அங்கிகாரம் கொடுத்துவிட்டார்கள். ஒரு சின்னம் கிடைப்பது மிகவும் கடினம். உதயசூரியன் சின்னமும் சுயேட்சை சின்னமாக இருந்து திமுக கட்சி சின்னமாக மாறியது. பானை சின்னத்தை மக்களே அங்கீகரித்துவிட்டார்கள்.
பானை சின்னம் பழங்காலத்தை நினைவூட்டும் சின்னம். உறுதியாக இருந்து சின்னத்தை பெற்றுள்ளதாக கூறினார். விசிகவிற்கு சின்னம் கிடைக்கக்கூடாது என யார் யாரோ என்னவெல்லாம் செய்தார்கள் கடைசியில் திருமாவளவன் தான் வெற்றி பெற்றார். சமூகத்தில் சமத்துவம் இல்லாமல் இருந்தது. இன்றைக்கும் அரசியலில் மத வெறியை தூண்டிவிட்டு அரசியல் செய்ய நினைப்பவர்கள் இருக்கிறார்கள், இங்குள்ள அனைவருக்கும் ஒரே ஒற்றுமை அனைவரும் அம்பேத்கரிய வாதிகள், பெரியாரிய வாதிகள். இன்றைக்கும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என கூறுபவர்களை எதிர்த்து நிற்பவபர்கள் தான் இந்தியா கூட்டணி என்றும் தேர்தலில் வெற்றி, தோல்வி முக்கியமில்லை கொள்கை தான் முக்கியம் என தெரிவித்தார்.
இந்த கூட்டணி தொடர வேண்டும் அப்போதுதான் இந்தியாவிற்கு நல்லது இந்தியை தினிக்கக்கூடாது. அந்த கொள்கையில் ஒருங்கினைந்தவர்கள். நமக்குள்ள 39 இடத்தில் இன்றும் குறையாது என அமித்ஷா கூறுகிறார். எங்களுக்கு அதுவா முக்கியம், மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்தினால் மத்தியப்பிரதேசத்திற்கு அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற தொகுதிகள் உயரும், மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்தக்கூடாது. குடும்ப கட்டுபாடு திட்டத்தை நாம் தான் கடைபிடுத்தோம் அதற்கு தண்டனையா இது என தெரிவித்தார். நாம் கூறுவது மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி, தலித் மக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்லது திருமாவளவன், சமத்துவத்தை விரும்பு அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள தலைவர் திருமாவளவன் என பொன்முடி தெரிவித்துள்ளார்.