திண்டிவனத்தில் ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் கவிழ்ந்து விபத்து 8 வயது சிறுமி உட்பட 18 க்கு மேற்பட்டோர்  காயம் அடைந்த நிலையில் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக  சென்னை தாம்பரம் பகுதியிலிருந்து 22 ஐயப்ப பக்தர்கள் தனியார் வேன் ஒன்றில் சபரிமலைக்குச் சென்றனர். அவர்களின் வேன் சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது திண்டிவனம் டி வி நகர்  என்ற இடத்தில், காலை 5:15 மணி அளவில் சென்றபோது வேன் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து  சிறிய பள்ளத்தில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 வயது சிறுமி  உட்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர்.


காயமடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு  மேல் சிகிச்சைக்காக பத்துக்கு ற்பட்டோரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் டிரைவர் சந்திரசேகர் தூக்க கலக்கத்தில் வண்டியை பள்ளத்தில் விட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.




திண்டிவனம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு:


சின்ன நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மகன் சாந்தகுமார் (வயது 16). அதே பகுதியை சேர்ந்த பா.ம.க. தொழிற்சங்க செயலாளர் தேசிங்கு. இவரது மகன் குமார் (16), பாலு மகன் என்பவரது புஷ்பராஜ் (17). இவர்கள் 3 பேரும் நேற்று மாலை வீட்டில் இருந்து தீவனூரில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் பிறந்தநாள் விழாவை முடித்து விட்டு, மீண்டும் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் தீவனூர் கூட்டேரிப்பட்டு சாலை, பெரமண்டூர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.


இதில் சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த குமார் மற்றும் புஷ்பராஜ் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த புஷ்பராஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.