கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா எல்.என்.புரம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (வயது 40). சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய சகோதரியை விழுப்புரம் அருகே காங்கேயனூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரஜினிகாந்த் சகோதரியின் கணவரான அன்பரசன் ஏற்கனவே இறந்துவிட்டதால் அவரது இளைய மகன் கவிசர்மா(5) என்பவனை ரஜினிகாந்த், தனது வீட்டில் தங்க வைத்து பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்த்து படிக்க வைத்துள்ளார்.






 


இந்தநிலையில், நேற்று பள்ளி முடிந்ததும் காங்கேயனூருக்கு சென்று கவிசர்மாவின் பொருட்களை எடுத்து வருவதற்காக மாலையில் பண்ருட்டியில் இருந்து சிறுவனை அழைத்துக்கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் ரஜினிகாந்த் காங்கேயனூர் புறப்பட்டார். விழுப்புரத்தை அடுத்த வாணியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது 2 தனியார் கல்லூரி பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக வந்தன. இதில் ஒரு பேருந்து, ராங்ரூட்டில் ஏறும்போது ரஜினிகாந்த் ஓட்டிவந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரஜினிகாந்த், கவிசர்மா ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




அங்கு சிகிச்சை பலனின்றி கவிசர்மா பரிதாபமாக உயிரிழந்தான். பலத்த காயமடைந்த ரஜினியை கிராம மக்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரஜினியும் உயிரழந்தார். விபத்து நடந்ததும் பேருந்து ஓட்டுநர்கள் இரண்டு பேரும் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர். இதையறிந்ததும் ஆத்திரமடைந்த மக்கள் அங்கு திரண்டு வந்து 2 பேருந்தின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர்களை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே அவர்களிடம் வளவனூர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுநர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் வத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கான முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் வைத்துள்ளனர். விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில் அதிக வேகமாக செல்லும் தனியார் பேருந்துகள் மற்றும் இந்த கல்லூரி பேருந்துக்களால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதோடு உயிரழப்புகளும் ஏற்படுவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விபத்துக்குறித்த பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. விபத்தில் சிறுவன் உட்பட இருவர் உயிரழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.


திண்டிவனம் அருகே அனுமதி இல்லாமல் பார்மண் கொள்ளை; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்..!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண