கூவாகத்தில் சாப்பிட்டுவிட்டு ஓட்டலை சூறையாடிய திருநங்கைகளால் பரபரப்பு

ஓட்டலில் உணவு சாப்பிட்டு விட்டு பணம் கொடுப்பதில் தகராறு செய்த திருநங்கைகள், திடீரென ஓட்டலை சூறையாடியதோடு அதன் உரிமையாளர், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Continues below advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகம் கிராமத்தில் குவிந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் திருநங்கைகள் உணவு சாப்பிட சென்றனர். அங்கு அவர்கள் விரும்பிய உணவுகளை கேட்டு அங்கிருந்த ஊழியர்களிடம் ஆர்டர் கொடுத்துள்ளனர். அப்போது மாலை 3.30 மணி ஆவதால் சில உணவு வகைகள் தற்போது இல்லை, தீர்ந்து விட்டதாக ஓட்டல் ஊழியர்கள் கூறியுள்ளனர். அதற்கு அவர்களிடம் திருநங்கைகள் வாய்த்தகராறில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

பின்னர் ஓட்டலில் இருந்த உணவு வகைகளை அவர்கள் வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுப்பதில் ஓட்டல் ஊழியர்களுடன் மீண்டும் திருநங்கைகள் தகராறில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் அங்கு 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் குவிந்து அந்த ஓட்டலின் முன்பக்க கதவுகளை இழுத்து பூட்டி அங்குள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த சம்பவத்தை ஓட்டலின் உரிமையாளர் ஜெயராமன், தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதை பார்த்த திருநங்கைகள், ஓட்டல் உரிமையாளர் ஜெயராமனின் செல்போனை பிடுங்கிக்கொண்டு அவரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


அதோடு அவரை சுற்றி நின்றுகொண்டு கும்மியடித்தனர். இதனை அருகில் உள்ள மற்ற கடை உரிமையாளர்கள் தட்டிக்கேட்டபோது அவர்களிடமும் திருநங்கைகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட திருநங்கைகளை அழைத்து பேச்சுவார்தை நடத்தினர். மேலும் ஓட்டலை அடித்து நொறுக்கிய திருநங்கைகளை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டு, அதற்கான ஆவணங்கள் இருக்கிறதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் ஓட்டலை திருநங்கைகள் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொட

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola