கைப்பந்து கழகத்தில் போதிய நிதி ஆதாரம் இல்லாத காரணத்தினால் தமிழக அரசாங்கம் தான் இண்டோர் ஸ்டேடியம் அமைக்கவேண்டும். அப்படி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக கெளதம சிகாமணி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தெண்மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியினை எம்பி கெளதமசிகமாணி கலந்து கொண்டு இன்று துவக்கி வைத்தார். இன்று தொடங்கிய கூடைப்பந்து போட்டி வருகின்ற 8 ஆம் தேதி வரை நடைபெறுவதால் தமிழ்நாடு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி தெலுங்கானாவை சார்ந்த 67 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்கின்றன இதில் தேர்வாகும் நான்கு அணிகள் அகில இந்திய அளவில் ஹரியானாவில் நடைபெறவுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

போட்டியை தொடங்கி வைத்த பின் பேட்டியளித்த கைப்பந்தாட்ட கழக தலைவரும் எம் பியுமான கெளதமசிகாமணி தமிழக மாவட்டங்களில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இண்டோர் ஸ்டேடியம் அமைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளதால் கைப்பந்து கழகத்தில் போதிய நிதி ஆதாரம் இல்லாத காரணத்தினால் தமிழக அரசாங்கம் தான் இண்டோர் ஸ்டேடியம் அமைக்கவேண்டும் என்றும் அப்படி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக கெளதம சிகாமணி தெரிவித்தார். மேலும் பருத்திதுறை நீதிமன்றத்தில் தமிழக மீனவர்கள் விலங்கை போல சங்கிலியால் கட்டி ஆஜர்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்துள்ளார். 

 


என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.