விழுப்புரம்: விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்த மகனுக்கு இழப்பீடாக 17 லட்சம் வழங்க தீர்ப்பு அளித்து மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா ஆணை வழங்கிய போது கண்ணீர் மல்க தாய் நன்றிகூறி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட தலைமை நீதிபதி பூர்னிமா தலைமையில் நடைபெற்றது. அப்போது தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்து  பேசிய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா விழுப்புரம் மாவட்டம் விவசாயிகள் நிறைந்த இந்தபகுதியில் விவசாயிகள் நிலம் தொடர்பாக வழக்குகள் தொடுப்பதாகவும், இதனால் விவசாயம் செய்ய முடியாமல் பல ஆண்டுகள் வீணடிக்கப்படுவதாவும் விவசாயிகள் மத்தியில்  விட்டுக்கொடுக்கும், மனப்பாண்மை என்பது குறைவு என்பதால் சகோதரர்களுக்கு மத்தியிலான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், விட்டுக்கொடுத்து சென்றால் எவ்வளவோ வழக்குகளில் தீர்வு காண முடியும் என்றும் நீதி உடனடியாக கிடைக்கும் வேண்டும் என்றுதான் உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் விரும்புவதாக தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து சமரசம் முடிந்து தீர்க்கப்பட்ட வழக்குகளுக்கு நீதிபதி பூர்ணிமா ஆணை வழங்கிய போது கடந்த 2022 ஆம் ஆண்டு பாப்பனம்பட்டினை சார்ந்த இளைஞர் மரிஷ் உயிரிழந்த வழக்கில் அவரது பெற்றோர்கள் வேல்முருகன் ஆதிலட்சுமி ஆகியோருக்கு வழக்கின் தீர்ப்பின் படி 17 லட்சம் இழப்பீட்டிற்கான ஆணையை வழங்  நீதிபதி பூர்ணிமா வழங்கினார். ஆணையை பெறும்போது கண்ணீர் மல்க கதறி அழுது மகனை இழந்த ஆதிலட்சுமி மாவட்ட நீதிபதி பூர்ணிமாவுக்கு நன்றி தெரிவித்து மயங்கிவிழுந்தார். இதனையடுத்து மயங்கி விழுந்தவருக்கு நீதிபதி தண்ணீரை கொடுத்து தேற்றினார். இச்சம்பவத்தால் விழுப்புரம் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.