தமிழகத்தில் சில மாதங்களாக பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வகுப்பறையில் அடாவடித்தனத்தை ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐந்து மாணவர்கள் ஒன்றாக சேர்த்து ஒரு ஆசிரியரை கேலி செய்வதும், மேலும் ஒரு மாணவன் கஞ்சா போதையில் பள்ளியில் ஆசிரியர் ஒருவரை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி தற்போது பேசுபொருள் ஆகி வருகிறது.




விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருக்கும் மாணவர்களை துடப்பத்தால் தாக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பள்ளி வகுப்பறையில் உள்ள இருக்கக்கூடிய மின்விசிறி மற்றும் சுவிட்ச்போட் ஆகியவற்றை அடித்து நொறுக்கி உள்ளனர் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற சம்பவம் இப்பள்ளியில் அரங்கேறி வருவதாக பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளிக் கூடம் விசாரித்தபோது பள்ளி மாணவர்கள்  ஒன்றிணைத்து காலையில் வருகைப்பதிவு எடுத்தவுடன் வெளியே சென்று பள்ளியின் பின்பக்க மதில் சுவர் எகிறி குதித்து முட்புதருக்குள்  மது அருந்துவதும் கஞ்சா புகைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர். 






இது தொடர்பாக பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:- இப்பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  இதில் குறிப்பாக 8ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சரியாக பள்ளிக்கு வருவது கிடையாது,  மேலும்  50 சதவீத மாணவர்கள் போதை மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி அடாவடித்தனத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வகுப்பறைக்குள் கஞ்சா புகைப்பது மது அருந்துவது மற்றும் செல்போனை வைத்து அட்டகாசம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இது குறித்து ஆசிரியராக நான் கண்டித்தால் என்னை அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர். மேலும் பள்ளிக்கு அழைத்து வந்து இதுபோன்ற மிரட்டல்களை விடுவதால் எங்களால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என ஆசிரியர் தரப்பில் கூறப்படுகிறது.