திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தில் மீது  ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் கல்லூரி மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி நடத்தினார். அதன் ஒரு பகுதியாக கல்லூரி  சாலைக்கு வந்து கல்லூரி மாணவர்கள் திடீரென அங்கு வந்த அரசு பேருந்து மேல் கூரையில் மீது ஏறி அரசு பேருந்தை மறித்து மேளதாளுத்துடன் பாட்டு பாடி நடனம் ஆடினர்.


 






மேலும் பஸ்ஸை மறித்து சுமார் அரை மணி நேரமாக அங்கிருந்து செல்ல விடாமல் கல்லூரி மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இந்த  வீடியோ ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கல்லூரி மாணவர்களை காவல் துறையினர் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இதற்கு முன்பாக இதே கல்லூரி மாணவர்கள் கல்லூரி வெளியில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ, என பல்வேறு பள்ளி,கல்லூரி மாணவர்களால் தொடர்ச்சியாக ஓழுங்கின செயல்களில் ஈடுபட்டு வரும் வீடியோ வைரலாகி வருவது தற்போது பெற்றோர்கள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.