விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ‘பெண் குழந்தைகளை காப்போம்”  “பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” குறித்து புதுமண தம்பதியினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர்  மோகன் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், “பெண் குழந்தைகளை காப்போம்”  “பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” இத்திட்டம் பெண் குழந்தைகளின் விகிதம் மற்றும் பிறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் பொருட்டு முதன்முதலாக நாட்டின் 100 மாவட்டங்களில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் 2015-ஆம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்டது. இத்திட்டம் 2018-ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் மாவட்டத்தில செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண் குழந்தைகள் உயிர் வாழ்தல் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவற்றினை உறுதி செய்து அவர்களின் பிறப்பை போற்றுவதாகும். தற்பொழுது பெண் குழந்தை பாலின விகிதம் தேசிய அளவில் 1000-த்திற்கு 918-ம் தமிழக அளவில் 943 என்ற அளவில் உள்ளன.


விழுப்புரம் மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் பெண் குழந்தைகளின் கல்வியினை மேம்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் புதுமண தம்பதியினருக்கு தெரிவிக்கின்ற வகையில் நடைபெற்றுகொண்டிருக்கிறது. இக்கருத்தரங்கத்தில் பெண் கருவிற்றிருக்கும்போது கருவில் இருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என ஆர்வம் காட்டக்கூடாது. மேலும் இதுபோன்று என்ன குழந்தை என்று ஆர்வம் காட்டுபவர்கள் மீது சட்டரீதியாக எடுக்கப்படும் எனவும் மருத்துவர்களும் இதற்கு உறுதுணையாக இருந்தால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆட்சியர் மோகன் பேட்டி:- கருவிலிருக்கும் குழந்தை என்னவென்று கண்டறிதலை தடுக்கும் விதமாக புதுமத தம்பதிகளுக்கான கருத்தரங்கில் வலியுறுத்தபட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பார்பவர்களை கண்டறிந்து கூறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை. பெண் குழந்தைகள் பிறந்தால் 18 ஆயிரம் வழங்கப்பட்டு  வருகிறது. இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தால் 50 ஆயிரமும், நாப்கின் வழங்கும் திட்டமும் பெண்கள் தங்கும் விடுதியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


பாதுகாப்பு இல்லாத அரசு பள்ளி கட்டிடங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் 214 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்ட நிலையில்  கட்டிடங்கள் கட்டும் பணி மழைகாலம் முடிந்தவுடன் உடனே தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். கொரனோவிற்கு பிறகு கல்வி இடைநிற்றல் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் விழுப்புரம் மாவட்டத்தில் 7320 ஆயிரமாக இருந்து இன்று 1970 மாணவர்களாக குறைந்துள்ளது. பெண்மைக்கும் என்றும் ஒரு சிறப்பு உண்டு ஆண்களை பக்குவப்படுத்தும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். மனைவியை படத்திற்கு அழைத்து செல்வது ஐஸ் கிரிம் வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்துவது பெண்மையை போற்றுவது இல்லை மனைவியை புரிந்து கொண்டு கணவர்கள் செயல்பட வேண்டும் என்று கூறினார்.