மனிதநேய வார விழா:


விழுப்புரம் மாவட்டம், பழைய நகராட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு காவல்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில், மனிதநேய வார விழா மாவட்ட ஆட்சியர் மோகன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், மாண்மிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமூக நீதியினையும், மனிதநேயத்தினையும் பின்பற்றுவதில் மிகவும் உறுதியாக செயல்பட்டு வருகிறார்கள். அதனடிப்படையில், மாவட்டத்தில் மனிதநேய வார விழா ஒருவார காலம் கொண்டாடப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் 24.01.2023 முதல் 30.01.2023 வரை மனிதநேய வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.


மனிதநேயம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் பள்ளி, மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மனித நேயம் என்பது சக மனிதர்களிடத்தில் காட்டுவது மட்டும் அல்ல பிற உயிர்களிடத்தும் நாம் மனிதநேயத்தினை கடைபிடித்து இரக்க குணத்துடன் செயல்பட வேண்டும். பிறரது துன்பத்தினை நமது துன்பமாக கருதி பிறருக்கு உதவுதல், கோவம், பொறாமை, வெறுப்பு, குற்றம் காணுதல், போன்ற தீய குணங்களை தவிர்த்து சக மனிதர்களிடம் அன்பாக இருக்க பழகுவதே மனிதநேயமாகும்.


மேலும், சமூகத்தில், பின்தங்கிய மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பின்தங்கிய மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவர்கள் கல்வி கற்பதற்காக உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. சமூகத்தில், ஏற்றத்தாழ்வின்றி பொதுமக்கள் மனிதநேயத்துடன் வாழ்ந்திட காவல்துறையின் பங்கு மிக இன்றியமையததாக இருந்து வருகிறது. சமுதாயத்தில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் தொடர் கண்காணிப்பு பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரிய செயலாக உள்ளது. மனிதநேயத்துடன் நாம் ஒவ்வொருவரும் நடந்து கொண்டால் சமுதாயம் வளர்ச்சியடைவதுடன், நாம் அனைவரும் ஏற்றத்தாழ்வின்றி ஒற்றுமையுடன் இருந்திட முடியும் என மாவட்ட ஆட்சியர் மோகன், தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.